Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
தஞ்சாவூர் கார அடை ரெசிபி... இட்லி, தோசையை விட சூப்பரா இருக்கும் இந்த டிபன செஞ்சு எல்லாரையும் அசத்துங்க...!
Thanjavur Adai Dosa Recipe in Tamil: தமிழ்நாடு சுவையான உணவுகளுக்கு பெயர் பெற்றது. மதுரை, காரைக்குடி போன்ற இடங்கள் உணவுக்கு பிரசித்தி பெற்றவையாக இருந்தாலும், ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பிரசித்தி பெற்ற சில உணவுகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் தஞ்சாவூரின் பல புகழ்பெற்ற உணவுகளில் கார தோசை அல்லது ஒரப்பு அடை மிகவும் பிரபலமானதாகும்.
தினமும் இட்லி, தோசை போன்ற உணவுகளையே சாப்பிட்டு சலித்துப் போனவர்களுக்கு இந்த ஒரப்பு அடை வித்தியாசமானதாக சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். இந்த அடையை காலை அல்லது இரவு உணவாகவும் சாப்பிடலாம் அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். இதில் கூடுதல் சிறப்பு இதற்கு சைடிஷ் எதுவுமே தேவையில்லை அப்படியே சாப்பிடலாம். இந்த பதிவில் சூப்பரான தஞ்சை ஸ்பெஷல் ஒரப்பு அடையை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- இட்லி அரிசி - 1 கப்
- பச்சரிசி - 1 கப்
- கடலைப்பருப்பு - 1 கப்
- துவரம் பருப்பு - 1 கப்
- உளுந்தம் பருப்பு - 1 கப்
- நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
- வர மிளகாய் - 8
- சோம்பு - 1ஸ்பூன்
- துருவிய சுரைக்காய் - கால் கப்
- துருவிய தேங்காய் - கால் கப்
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
- உப்பு தேவைக்கேற்ற
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை:
- ஒரு கப் இட்லி அரிசி, ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் துவரம் பருப்பு, ஒரு கப் கடலை பருப்பு, ஒரு கப் உளுந்து பருப்பு சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.
- இவை நன்கு ஊறியதும் காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக தோசை மாவு போலல்லாமல் கொஞ்சம் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
- பின், அரைத்த மாவுடன், அரை கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், 1/4 கப் துருவிய சுரைக்காய், 1/4 கப் துருவிய தேங்காய், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு ஒரு மணி நேரம் வைக்கவும்.
- பின்னர் தோசைக்கல்லில் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், தயார் செய்து வைத்துள்ள மாவை நீங்கள் விரும்பிய வடிவில் மெலிதாகவோ அல்லது கெட்டியாகவோ கல்லில் ஊற்றி வேக வைக்கவும்.
- அடை இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் தட்டிற்கு மாற்றி சூடாக சாப்பிடவும்.நீங்கள் விரும்பினால் கெட்டியான தேங்காய் சட்னி இதற்கு சூப்பரான சைடிஷாக இருக்கும். அதனுடன் வைத்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications