Latest Updates
-
அக்டோபர் 28, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
தீபாவளிக்கு முன் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்! -
சூரியன் ஸ்வாதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஸ்கூலுக்கு ஒருவாட்டி இப்படி குஸ்கா செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
மீந்து போன சாதத்தை வைச்சு இந்த மாதிரி டிபன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
Hair Care: இந்திய ராணிகள் முடியை ஆரோக்கியமாக பராமரிக்க பின்பற்றிய எளிய வழிகள் என்னென்ன தெரியுமா? -
உங்க வீட்டில் பணம் தங்கமாட்டீங்குதா? அப்ப பணம் வெக்குற இடத்துல இந்த பொருட்களை வெக்காதீங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அனைவரின் மீதும் உண்மையான அக்கறை காட்டும் அன்பானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க சருமத்தில் அசிங்கமா தோல் உரியுதா? அப்ப இந்த நேச்சுரல் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
பூச்சி மற்றும் வண்டுகள் அரிசியை நெருங்கவே கூடாதா? அப்ப இந்த பொருட்களில் ஒன்றை அரிசியில் போட்டு வையுங்க
4 தக்காளியும், 5 ஸ்பூன் உளுத்தம் பருப்பும் இருந்தா.. இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
Thakkali Ulunthu Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலை வேளையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? இந்த இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுப்பது ஒரு பெரிய வேலையாக உள்ளதா? எப்போதும் ஒரே சட்னியை செய்து, உங்கள் வீட்டில் உள்ளோர் புதுமையான சுவையில் சட்னியை செய்து கொடுக்க கேட்கிறார்களா?

உங்கள் வீட்டில் இருப்போருக்கு தக்காளி சட்னி என்றால் பிடிக்குமா? அப்படியானால் ஒரே சுவையில் தக்காளி சட்னி செய்யாமல், ஒருமுறை தக்காளி மற்றும் உளுத்தம் பருப்பு கொண்டு தக்காளி சட்னி செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, சுவையும் பிரமாதமாக இருக்கும்.
உங்களுக்கு இந்த தக்காளி உளுந்து சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெள்ளை அல்லது கருப்பு உளுந்து - 5 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* வரமிளகாய் - 3
* புளி - சிறிய துண்டு
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 4 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக
வறுக்க வேண்டும்.
* பின் அதில் கடுகு, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய், புளி சேர்த்து வதக்கி, கொத்தமல்லி
மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய 4 தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால்,
சுவையான தக்காளி உளுந்து சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
