Latest Updates
-
அக்டோபர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் வைச்சு செய்யப்போகுதாம் -
அதிசார குரு பெயர்ச்சி 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்? - ஜோதிடர் கணிப்புகள் -
குருபகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொடி வறுவல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா செமையா இருக்கும் -
மழைக்காலத்தில் பளிச்சுன்னு அழகாக இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க.. -
கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேணுமா? அப்ப இந்த 5 பழங்களில் ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்க -
வாஸ்துப்படி, வீட்டில் இந்த 5 பொருட்களை காலியா வெச்சுக்காதீங்க.. இல்ல லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க யாராலும் தடுக்க முடியாதவர்களாம் - இவர்களின் வெற்றி பிறக்கும்போதே உறுதி செய்யப்பட்டது -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்க முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கம் எதுன்னு சொல்றோம்..
3 தக்காளியும், 4 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அல்டிமேட்டா இருக்கும்..
Thakkali Kathirikai Kadayal Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் டிபனாக செய்யப் போகிறீர்களா? அதற்கு தினமும் ஒரே சுவையில் சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் தக்காளியும், கத்திரிக்காயும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு கடையலை செய்யுங்கள். இந்த தக்காளி கத்திரிக்காய் கடையல் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, கத்திரிக்காய் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு இந்த தக்காளி கத்திரிக்காய் கடையல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கத்திரிக்காய் கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பூண்டு - 7 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கத்திரிக்காய் - 4 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* புளி - சிறிய துண்டு
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கொத்தமல்லி, கத்திரிக்காய் மற்றும் புளியை சேர்த்து,
தக்காளியும், கத்திரிக்காயும் மென்மையாகும் வரை வேக வைக்க
வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து
கிளறி, பச்சை வாசனை போக வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத்
தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* இறுதியாக அதில் அரைத்ததை சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைத்து
இறக்கினால், சுவையான தக்காளி கத்திரிக்காய் கடையல் தயார்.



Click it and Unblock the Notifications
