Latest Updates
-
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
4 தக்காளி இருந்தா போதும் இட்லி, தோசைக்கு வெங்காயம், பூண்டு இல்லாத சூப்பரான சட்னி செய்யலாம்... ட்ரை பண்ணுங்க...
Thakkali Karuveppilai Chutney Recipe in Tamil: தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு உணவென்றால் அது எப்போதும் இட்லி அல்லது தோசைதான். இட்லி, தோசைக்கு சரியான மற்றும் எளிமையான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னிதான். இட்லி, தோசையை சுவையாக்குவதே அதற்கு பரிமாறப்படும் சட்னிதான். எனவே அந்த சட்னி சுவையானதாக இருக்க வேண்டியது அவசியம்.
பொதுவாக இட்லி, தோசைக்கு அரைக்கப்படும் சட்னிகளில் வெங்காயம் மற்றும் பூண்டு பிரதான பொருட்களாக இருக்கும். ஆனால் இந்த இரண்டு பொருட்களும் இல்லாமலேயே இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னியை செய்யலாம். வெங்காயமும், பூண்டும் இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த தக்காளி கறிவேப்பிலை சட்னியானது தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை வைத்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான சட்னியாகும்.

உங்களுக்கு தக்காளி கறிவேப்பிலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கறிவேப்பிலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- பொடியாக நறுக்கிய தக்காளி - 4
- கறிவேப்பிலை கொத்து - 3
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 கைப்பிடி
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - 1 சிட்டிகை
- எண்ணெய் - 1 ஸ்பூன்
தாளிக்க:
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- வர மிளகாய் -
- பெருங்காயம் - 1 சிட்டிகை
செய்முறை:
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- கறிவேப்பிலை வதங்கியதும் கொத்தமல்லி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து வதக்கவும்.
- கொத்தமல்லி சுருங்கியதும் நறுக்கிய தக்காளியும், தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்.
- தக்காளி ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகைச் சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் இந்த தாளிப்பை சட்னி மீது கொட்டி கிளறினால் சூப்பரான தக்காளி கறிவேப்பிலை சட்னி ரெடி.
- இந்த தக்காளி கறிவேப்பிலை சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications