Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
இட்லிக்கு எப்பவும் சட்னி, சாம்பார்-ன்னு செய்யாம.. ஒருடைம் இந்த கடப்பாவை செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்..
Tomato Kadappa Recipe In Tamil: இட்லிக்கு எப்போதும் சட்னி, சாம்பார் என்று செய்து போடித்துவிட்டதா? அப்படியானால் ஒரு மாற்றத்திற்கு வீட்டில் தக்காளி இருந்தால், அதைக் கொண்டு தக்காளி கடப்பா செய்யுங்கள்.
இந்த தக்காளி கடப்பா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். இந்த கடப்பா இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த கடப்பாவை செய்தால், வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு தக்காளி கடப்பாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கடப்பா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தக்காளி - 4
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளியை நன்கு அரைத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே மிக்சர் ஜாரில் சோம்பு, பொட்டுக்கடலை, தேங்காய், பச்சை
மிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு 3-4
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம்
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு பச்சை
வாசனை போக 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கிளறி
இறக்கினால், சுவையான தக்காளி கடப்பா தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications











