Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
மரவள்ளிக்கிழங்கு வாங்குனா.. இப்படி ஈவ்னிங் டைம்-ல செய்யுங்க.. பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க..
Maravalli Kizhangu Paniyaram Recipe In Tamil: மாலை வேளையில் பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியை போக்கும் வகையில் ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மரவள்ளிக் கிழங்கு உள்ளதா? ஆனால் அதை உங்கள் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு அந்த மரவள்ளிக்கிழங்கு கொண்டு இனிப்பு பணியாரம் போன்று செய்து கொடுங்கள்.
இப்படி செய்யும் போது, மரவள்ளிக்கிழங்கு சாப்பிடாத குழந்தைகளும், அதை கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். மரவள்ளிக்கிழங்கு உடலுக்கு மிகவும் நல்லது. இதை அடிக்கடி குழந்தைகளின் உணவில் சேர்த்துக் கொண்டால், அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முக்கியமாக மாலை வேளையில் இப்படி சத்தான பொருளை வித்தியாசமாக செய்து கொடுக்கும் போது, அவர்களின் பசியும் தணியும், ஆரோக்கியமும் மேம்படும்.

உங்களுக்கு மரவள்ளிக்கிழங்கு பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மரவள்ளிக்கிழங்கு பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/4
* தேங்காய் - 1/2 மூடி
* சர்க்கரை - 50 கிராம்
* மைதா மாவு - 1 கப்
* இட்லி மாவு - 1/2 கப்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய்/நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மரவள்ளிக்கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின் துருவியதை இட்லி தட்டில் போட்டு, இட்லி பாத்திரத்தினுள்
வைத்து, 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் வேக வைத்த மரவள்ளிக்கிழங்கை போட்டு,
அத்துடன் 1 சிட்டிகை உப்பு, ஏலக்காய் தூள், துருவிய 1/2 மூடி தேங்காய்
மற்றும் சர்க்கரையை சேர்த்து, கரண்டியால் மசித்து விட வேண்டும்.
* பிறகு கிழங்கானது ஓரளவு ஆறியதும், அந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை எடுத்து, அத்துடன் இட்லி மாவு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள
வேண்டும்.
* அதன் பின் பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் எண்ணெய்
அல்லது நெய்யை சிறிது ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து மைதா மாவு கலவையில் பிரட்டி,
பணியாரக் குழிகளில் போட்டு, நன்கு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால்,
சுவையான மரவள்ளிக்கிழங்கு பணியாரம் தயார்.



Click it and Unblock the Notifications









