Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
4 நாள் ஆனாலும் கெட்டுப் போகாத.. தஞ்சாவூர் ஸ்பெஷல் பூண்டு மிளகாய் சட்னி - எப்படி செய்றதுன்னு பாருங்க...
Tanjore Special Poondu Milagai Chutney: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து அலுத்துவிட்டதா? சமைக்கும் உங்களுக்கே அலுத்துப் போகும் போது, சாப்பிடுபவர்களுக்கு எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். எனவே உங்கள் வீட்டில் இருப்போருக்கு வாய்க்கு ருசியாக இருக்குமாறான ஒரு அட்டகாசமான மற்றும் சற்று புளிப்பான சட்னியை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
அப்படியானால் வெறும் 3 பொருட்களைக் கொண்டு அட்டகாமான சுவையில் தஞ்சாவூர் ஸ்பெஷல் பூண்டு மிளகாய் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி 4 நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் பிரஷ்ஷாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு தஞ்சாவூர் ஸ்பெஷல் பூண்டு மிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஞ்சாவூர் ஸ்பெஷல் பூண்டு மிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 15
* பூண்டு - 25 பல்
* பெரிய தக்காளி - 3
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாய் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை நன்கு
வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பூண்டு பற்களை சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்க
வேண்டும்.
* தக்காளி நன்கு குலைந்து வதங்கியதும், அதை இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி,
எண்ணெய் சூடானதும், கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும்.
* கடுகு நன்கு பொரித்ததும், உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* இறுதியாக அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் வேக வைத்து இறக்கினால்,
சுவையான தஞ்சாவூர் ஸ்பெஷல் பூண்டு மிளகாய் சட்னி தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications
