For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொரிகடலை உருண்டை செய்யறது இவ்வளவு ஈஸியா?

Posted By: R. SUGANTHI Rajalingam
|
பொரிகடலை உருண்டை செய்யறது இவ்வளவு ஈஸியா | Boldsky

தம்புட்டு ரெசிபி ஒரு கர்நாடக ஸ்டைல் ரெசிபி. அப்படியே மெதுவான பந்து போல வறுத்த பொரி கடலை பருப்பால் செய்து அதன் மேல் அப்படியே வெல்ல பாகுவால் நனைத்து நெய் சொட்ட சொட்ட நறுமணம் மிக்க ஏலக்காய் சுவையுடன் ஒரு கடி கடிக்கும் போதே நம் நாவில் எச்சி ஊறி விடும். இந்த தம்புட்டு ரெசிபியை வீட்டில் எளிதாக செய்வதோடு கலோரி குறைந்தது என்பதால் உங்கள் டயட்டில் கூட சேர்த்து கொள்ளலாம்.இதை எப்படி செய்வது என்பதை செய்முறை விளக்கத்துடன் பார்க்கலாம்.

Tambittu recipe
தம்புட்டு ரெசிபி /வறுத்த கடலை பருப்பு லட்டு செய்வது எப்படி /உரிகடல
தம்புட்டு ரெசிபி/தம்புட்டு செய்முறை விளக்கம் /தம்புட்டு வீடியோ ரெசிபி
Prep Time
40 Mins
Cook Time
30M
Total Time
1 Hours10 Mins

Recipe By: காவ்யா

Recipe Type: டெசர்ட்

Serves: 5-6

Ingredients
  • அரிசி மாவு - 1/2 கப்

    பொரிகடலை - 1/2 கப்

    உலர்ந்த தேங்காய் துருவல் - 1/2 கப்

    நிலக்கடலை - 1/2 கப்

    வெல்லம் - 3/4 கப்

    உலர்ந்த பழங்கள் (முந்திரி +உலர்ந்த திராட்சை பழங்கள்) - 8-10 (உடைத்தது)

    நெய் - 1/2 கப்

    தண்ணீர் - 1/4 கப்

    ஏலக்காய் - 4

Red Rice Kanda Poha
How to Prepare
  • 1.ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்ற வேண்டும்

    2. அதில் முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை பழங்கள் சேர்த்து

    பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதை தனியாக எடுத்து வைக்கவும்

    3. இப்பொழுது அதே கடாயில் பொரி கடலை, நிலக்கடலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.

    4.1-2 நிமிடங்கள் வரை வறுத்து ஒரு மிக்ஸி சாரில் தட்ட வேண்டும்.

    5. இப்பொழுது எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்

    6. அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து அதில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடுபடுத்த வேண்டும்.

    7. வெல்லம் முழுவதுமாக கரைந்து கொஞ்சம் கெட்டியான பதம் வரும் வரை சூடுபடுத்தவும்.

    8. இப்பொழுது அரைத்த கடலை கலவை, நெய் ,அரிசி மாவு போன்றவற்றை வெல்லத்துடன் சேர்த்து கிளற வேண்டும்.

    9. வறுத்த உலர்ந்த பழங்களையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

    10.இதை தட்டில் தட்டி சில நிமிடங்கள் ஆற விடவும்

    11. பிறகு பந்து அல்லது உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் உருட்டி ஒரு தட்டில்

    வைத்து பரிமாறவும்.

Instructions
  • 1.அதிகமாக அரிசி மாவு பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் லட்டு உலர்ந்து போய் சீக்கிரம் உடைந்துவிடும். பிடிக்கவும் வசதியாக இருக்காது
  • 2.நிலக்கடலையை அதிக நேரம் வறுக்க வேண்டாம். ஏனெனில் கருகி போகி அதன் சுவை மாறிவிடும்.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 லட்டு
  • கலோரிகள் - 102
  • கொழுப்பு - 5.8 கிராம்
  • புரோட்டீன் - 1.9 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 10.6 கிராம்
  • நார்ச்சத்து - 0.5 கிராம்

படத்துடன் செய்முறை விளக்கம் :தம்புட்டு(பொரிகடலை உருண்டை) செய்வது எப்படி

1.ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்ற வேண்டும்

2. அதில் முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை பழங்கள் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதை தனியாக எடுத்து வைக்கவும்.

3. இப்பொழுது அதே கடாயில் பொரி கடலை, நிலக்கடலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.

4.1-2 நிமிடங்கள் வரை வறுத்து ஒரு மிக்ஸி சாரில் தட்ட வேண்டும்.

5. இப்பொழுது எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்

6. அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து அதில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடுபடுத்த வேண்டும்.

7. வெல்லம் முழுவதுமாக கரைந்து கொஞ்சம் கெட்டியான பதம் வரும் வரை சூடுபடுத்தவும்.

8. இப்பொழுது அரைத்த கடலை கலவை, நெய் ,அரிசி மாவு போன்றவற்றை வெல்லத்துடன் சேர்த்து கிளற வேண்டும்.

9. வறுத்த உலர்ந்த பழங்களையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

10.இதை தட்டில் தட்டி சில நிமிடங்கள் ஆற விடவும்.

11. பிறகு பந்து அல்லது உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் உருட்டி ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

[ 4 of 5 - 66 Users]
English summary

Tambittu Recipe | How To Make Roasted Gram Dal Laddu | Hurigadale Tambittu Recipe

Tambittu is a traditional Karnataka-special sweet dish, loaded with the goodness of peanuts, gram dal, cashews and raisins, soaked in the delicate sweetness of jaggery and laced with the aroma of cardamom and ghee. Perfect for festival or any occasion, this low-calorie roasted gram dal laddu recipe can be made easily at home without consuming much of your time.
Story first published: Monday, March 19, 2018, 15:10 [IST]
Desktop Bottom Promotion