For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீச் மில்க் ஷேக்

By Maha
|

குழந்தைகளுக்கு மாலை வேளையில் எப்போதும் பால், காபி, டீ போன்றவற்றை செய்து கொடுத்து போர் அடித்திருந்தால், அப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். அதிலும் பீச் பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுத்தால், மிகவும் சூப்பராக இருக்கும்.

அந்த பீச் மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Peach Milkshake

தேவையான பொருட்கள்:

பீச் - 8-10
பால் - 1 கப்
வென்னிலா ஐஸ் க்ரீம் - 2 கப்
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
சாக்லெட் சாஸ் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பீச் பழத்தை நறுக்கி, மிக்ஸியில் போட்டு, 1/2 கப் பால் ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் வென்னிலா ஐஸ் க்ரீம் மற்றும் மீதமுள்ள பால் சேர்த்து, ஐஸ் கட்டிகளையும் சிறிது போட்டு, நன்கு மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு டம்ளரில் சாக்லெட் சாஸ் சேர்த்து, அந்த டம்ளரை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை வெளியே எடுத்து, அதில் அரைத்து வைத்துள்ள பீச் மில்க் ஷேக்கை ஊற்றி பரிமாறினால், சூப்பரான பீச் மில்க் ஷேக் ரெடி!!!

English summary

Peach Milkshake

Peach Milkshake is extremely easy to make and your kids will relish it with pleasure. Check out the recipe for Peach Milkshake.
Story first published: Tuesday, July 2, 2013, 18:44 [IST]
Desktop Bottom Promotion