Latest Updates
-
Diwali 2026: பட்டாசுப் பொறிகள் கண்களில் பட்டால் இந்தத் தவறுகளைச் செய்யாதீர்கள்! கண் மருத்துவர் எச்சரிக்கை! -
Diwali 2026: தீபாவளி பட்டாசு தீப்பொறி சருமத்தில் பட்டால் என்ன செய்வது? மருத்துவர் கூறும் முதலுதவி வழிகள்! -
குண்டூர் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
தீபாவளி ஸ்பெஷல் பாய்வீட்டு மட்டன் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 07, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிசயங்கள் நடக்கும் நாளாக இருக்குமாம் -
சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைந்திருப்பதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுதாம் - உங்க ராசி என்ன -
தீபாவளிக்கு இந்த பொள்ளாச்சி ஸ்டைல் சிக்கன் பிரியாணியை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
Skin Care: தக்காளி எப்படி உங்கள் சருமத்தை கண்ணாடி போல ஜொலிக்க வைக்கும் தெரியுமா? -
வார ராசிபலன் (08 November 2026-14 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
தீபாவளி ஸ்பெஷல் கேரளா ஸ்டைல் மனோகரம் முறுக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இனிப்பா சூப்பரா இருக்கும்
முலாம் பழ ஜூஸ்
உடலில் உள்ள வெப்பத்தை தணிப்பதில் முலாம் பழம் மிகவும் சிறந்த ஒன்று. இந்த பழத்தை அப்படியே சாப்பிட நன்றாக இருக்காது. அதனை சர்க்கரையில் தொட்டு தான் சாப்பிட முடியும். இல்லையெனில் அதன் கனிந்த பகுதியை எடுத்து, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
ஆனால் இப்போது சற்று வித்தியாசமான சுவையில் இருக்க, அதோடு சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து சாப்பிடலாம். அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
முலாம் பழம் - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
செய்முறை:
முலாம் பழத்தை இரண்டாக நறுக்கி, அதனுள் இருக்கும் விதைகளை நீக்கிவிட வேண்டும்.
பின்னர் ஒரு ஸ்பூனை வைத்து, அதனுள் உள்ள கனிந்த பகுதியை எடுக்க வேண்டும்.
அடுத்து மிக்ஸியில் எடுத்து வைத்துள்ள கனிந்த பகுதியை போட்டு, சர்க்கரை, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், குளிர்ச்சியைத் தரும் முலாம் பழ ஜுஸ் ரெடி!!!



Click it and Unblock the Notifications
