கேரளா ஸ்டைல் கேரட் பாயாசம்: ஓணம் ஸ்பெஷல் ரெசிபி

Posted By:
Subscribe to Boldsky

ஓணம் பண்டிகையின் போது கேரளா மக்கள் பல்வேறு வகையான பாயாசங்களை செய்து சுவைப்பார்கள். அதில் ஒன்று தான் கேரட் பாயாசம். இந்த கேரட் பாயாசமானது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

எனவே உங்கள் குழந்தை கேரட் சாப்பிட அடம் பிடித்தால், அவர்களுக்கு கேரட் பாயாசம் செய்து கொடுங்கள். அதிலும் கேரளா ஸ்டைலில். சரி, இப்போது அந்த கேரளா ஸ்டைல் கேரட் பாயாசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Kerala Style Carrot Payasam: Onam Special

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் - 1 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 5-6
உலர் திராட்சை - 5-6
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1/2 கப்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
ஏலக்காய் - 4 (நன்கு தட்டியது)

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பின்னர் அதில் கேரட்டைப் போட்டு நன்கு பச்சை வாசனை போக வதக்கி, பின் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

பாலானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைவில் வைத்து, 15 நிமிடம் கேரட்டை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.

கேரட் நன்கு மென்மையாக வெந்ததும், அதில் கேசரி பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கிளறி, அடுப்பை அணைத்து, பின் தட்டிய ஏலக்காயை சேர்த்தால், கேரட் பாயாசம் ரெடி!!!

Image Courtesy: thasneen

English summary

Kerala Style Carrot Payasam: Onam Special

Do you know how to prepare kerala style carrot payasam? Check out and give it a try during onam festival.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter