For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரட் கேக்: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

By Maha
|

கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கேக் வெட்டுவதாக இருந்தால், உங்கள் வீட்டில் உள்ளோருக்கு அல்லது உங்கள் நண்பர்களுக்கு உங்கள் கையாலேயே கேக் செய்து கொடுத்து அசத்துங்கள். உங்களுக்கு கேக் எப்படி செய்வதென்று தெரியவில்லையா?

கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக தமிழ் போல்ட் ஸ்கை கேரட் கேக்கை எப்படி செய்வதென்று தெளிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து பாருங்கள்.

Eggless Carrot Cake Recipe: Christmas Special

தேவையான பொருட்கள்:

மைதா - 3/4 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
துருவிய கேரட் - 1/2 கப்
தயிர் - 3/4 கப்
ஆலிவ் ஆயில் - 1/4 கப்
பால் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை பொடி - 1/2 கப்
வென்னிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
துருவிய பிஸ்தா, பாதம் - ஒரு கையளவு
பட்டர் பேப்பர் - 1

செய்முறை:

முதலில் சல்லடையில் மைதா, கோதுமை மாவு, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரைப் போட்டு சலித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் தயிர், சர்க்கரை, பால் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கிளறி, பின் அதில் கேரட் மற்றம் மைதா கலவையை சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மைக்ரோவேவ் ஓவனை 182 டிகிரி C-யில் 10 நிமிடம் சூடேற்ற வேண்டும்.

அதற்குள் பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை வைத்து, அதன் மேல் வெண்ணெய் தடவி, மைதாவை தூவி பின் கலந்து வைத்துள்ள மாவை அதில் ஊற்றி, மேலே பாதாம் பிஸ்தாவை தூவி, ஓவனில் வைத்து 20-25 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.

பின் அதனை உடனே ஒரு தட்டில் மாற்றி, 15 நிமிடம் குளிர வைத்து, பின் அதில் உள்ள பட்டர் பேப்பரை கவனமாக எடுத்துவிட்டு, கேக் நன்கு குளிர்ந்ததும், அதனை துண்டுகளாக்கினால், கேரட் கேக் ரெடி!!!

Image Courtesy: sharmispassions

English summary

Eggless Carrot Cake Recipe: Christmas Special

Do you know how to prepare eggless carrot cake? Check out and give it a try for this christmas.
Story first published: Saturday, December 13, 2014, 15:52 [IST]
Desktop Bottom Promotion