கொக்கோ தேங்காய் பர்ஃபி

Posted By:
Subscribe to Boldsky

சிறு வயதில் கடைகளில் தேங்காய் பர்ஃபி, கடலை மிட்டாய் போன்றவற்றை வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் தற்போது பெட்டி கடைகள் எல்லாம் போய்விட்டதால், சிறு வயதில் விரும்பி சாப்பிட்ட தின்பண்டங்களையெல்லாம் பலரும் மிஸ் பண்ணுவோம். ஆனால் அதில் ஒன்றான தேங்காய் பர்ஃபியை அருமையாக வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.

அதிலும் கொக்கோ சேர்த்து செய்யப்படும் தேங்காய் பர்ஃபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து பின் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Easy To Cook Cocoa Coconut Barfi

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 1 கப்
கொக்கோ - 1 கப்
பால் - 1 கப்
பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் - 1/2 டீஸ்பூன்
நெய் - 4-5 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொக்கோ மற்றும் 1 கப் சர்க்கரை சேர்த்து கிளறி, பின் வதக்கி வைத்துள்ள தேங்காயை சேர்த்த, பால் ஊற்றி குறைவான தீயில் கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் ஏலக்காய் பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை கிளற வேண்டும்.

அதற்குள் ஒரு தட்டில் நெய் தடவிக் கொள்ள வேண்டும். பின் தேங்காய் கலவையை தட்டில் பரப்பி, பின் கத்தி கொண்டு சதுரங்களாக வெட்டி, குளிர வைத்தால், கொக்கோ தேங்காய் பர்ஃபி ரெடி!!!

Image Courtesy: housewifeofmumbai.blogspot.com

English summary

Easy To Cook Cocoa Coconut Barfi

Take a look at the sweet recipes with cocoa and coconut for any festival. Try this coconut sweet barfi recipe.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter