For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்னையர் தின ஸ்பெஷல்: கண்டென்ஸ்டு மில்க் கஸ்டர்டு ரெசிபி

அன்னையர் தினத்தன்று தன்னை பெற்றெடுத்து வளர்த்த தாய்க்கு, நம் கையால் ஒரு அருமையான ரெசிபியை செய்து தர நினைத்தால், கண்டென்ஸ்டு மில்க் கஸ்டர்டு ரெசிபியை செய்து கொடுங்கள்.

|

பொதுவாக அம்மாவின் கை மணத்திற்கு ஈடு இணை யாரும் வர முடியாது என்று சொல்வார்கள். அத்தகைய அம்மாவை போற்றும் வண்ணம் மே மாதத்தில் வரும் இரண்டாம் ஞாயிற்று கிழமையில் அன்னையர் தினமானது வரும். இத்தினத்தன்று தன்னை பெற்றெடுத்து வளர்த்த தாய்க்கு, நம் கையால் ஒரு அருமையான ரெசிபியை செய்து தர நினைத்தால், கண்டென்ஸ்டு மில்க் கஸ்டர்டு ரெசிபியை செய்து கொடுங்கள்.

இது உண்மையிலேயே வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் இதை நீங்கள் உங்கள் கையால் உங்கள் அம்மாவிற்கு செய்து கொடுத்தால், அவர்கள் இன்னும் சந்தோஷமடைவார்கள். சரி, இப்போது அன்னையர் தின ஸ்பெஷல் ரெசிபியான கண்டென்ஸ்டு மில்க் கஸ்டர்டு ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பால் - 4 கப்
கண்டென்ஸ்டு மில்க் - 1/2 கேன்
வென்னிலா எசன்ஸ் - சிறு துளிகள்
முட்டை - 2
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
கஸ்டர்டு பவுடர் - 1 டீஸ்பூன்
துருவிய சாக்லெட் - 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். பாலானது 10 நிமிடம் நன்கு கொதித்ததும், அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி விட வேண்டும்.

அப்படி கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கும் போது பாலானது 2 நிமிடங்களில் கெட்டியாக ஆரம்பிக்கும்.

பால் கெட்டியாக ஆவதற்குள், ஒரு பௌலில் கஸ்டர்டு பவுடர், வென்னிலா மற்றும் முட்டை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அந்த முட்டையை கொதிக்கும் பாலுடன் சேர்த்து 2-3 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கினால், கண்டென்ஸ்டு மில்க் கஸ்டர்டு ரெடி!!!

English summary

Condensed Milk Custard: Mother's Day Special

The condensed milk custard recipe is very quick and easy. If you are a smart cook who likes to keep things simple, try out this Mother's Day dessert recipe on the sly.
Desktop Bottom Promotion