Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
தேங்காய் லட்டு
நவராத்திரி வரப்போகிறது. இந்த நவராத்திரிக்கு ஸ்பெஷலாக என்ன இனிப்பு செய்வது என்று யோசிக்கிறீர்களா? அப்படியெனில் தேங்காய் லட்டு செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மட்டுமல்லாமல், வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அசத்தும் வகையில் அதன சுவையானது இருக்கும்.
மேலும் இந்த ரெசிபிக்கு தேங்காய், பால், சர்க்கரை இருந்தால் போதும். அரை மணிநேரத்தில் தயார் செய்துவிடலாம். இங்கு அந்த தேங்காய் லட்டு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
தேங்காய் - 2 கப் (துருவியது)
கண்டென்ஸ்டு மில்க் - 2 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் - 1 டீஸ்பூன்
பாதாம் - 4-5
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். குறிப்பாக அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது லேசாக கிளறி விட வேண்டும்.
பின்னர் அதில் துருவிய தேங்காய் சேர்த்து, நன்கு கிளறி 10-15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கிளறி விட்டு, பின் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.
கலவையானது மிதமான சூட்டில் இருக்கும் போது, கையில் வெண்ணெய் தடவி, அதனை லட்டுகளாக பிடித்து, ஒவ்வொன்றின் மீது பாதாமை வைத்தால், சுவையான தேங்காய் லட்டு ரெடி!!!



Click it and Unblock the Notifications
