For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரட் அல்வா

By Maha
|

நவம்பர் மாதம் கேரட் சீசன் என்பதால் கேரட்டை எப்படியெல்லாம் சமைத்து சாப்பிட முடியுமோ, அப்படியெல்லாம் சமைத்து சாப்பிடுங்கள். அல்வா பிடிக்கும் என்றால் அதனை அல்வா செய்து சாப்பிடுங்கள். அதிலும் கோயா கொண்டு செய்யப்படும் அல்வாவை செய்து சாப்பிடுங்கள். இது இன்னும் சூப்பராக இருக்கும்.

இப்போது கோயா கொண்டு எப்படி கேரட் அல்வா செய்வது என்று பார்ப்போம்.

Carrot Halwa With Khoya Recipe

தேவையான பொருட்கள்:

கேரட் - 1 கிலோ (துருவியது)
பால் - 2 லிட்டர்
கோயா - 150 கிராம்
சர்க்கரை - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்

அலங்கரிக்க...

முந்திரி - 5-6
பாதாம் - 5-6
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

பாலானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைவில் வைத்து, 40-45 நிமிடம் பாலானது கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.

பால் கெட்டியானதும் அதில் துருவிய கேரட்டை சேர்த்து, கேரட் பாலை முற்றிலும் உறிஞ்சும் வரை கேரட்டை வேக வைக்க வேண்டும்.

இதற்கு குறைந்தது 40 நிமிடமாவது ஆகும். பின் அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கேரட்டை போட்டு 10-15 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு தீயை குறைவில் வைத்து, அதில் கோயா மற்றும் சர்க்கரை சேர்த்து 15- 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

சர்க்கரையானது முற்றிலும் கரைந்த பின்பு, அதனை இறக்கி, அதன் மேல் முந்திரி, பாதாம் மற்றும் ஏலக்காய் பொடி தூவி அலங்கரித்தால், சுவையான கேரட் அல்வா ரெடி!!!

English summary

Carrot Halwa With Khoya Recipe

If you love carrot halwa and want to prepare this sweet dish, then check out the sweet dish recipe that is prepared using khoya.
Story first published: Friday, November 15, 2013, 18:41 [IST]
Desktop Bottom Promotion