Latest Updates
-
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும்
பிரட் ட்ரை குலாப் ஜாமூன்: தீபாவளி ஸ்பெஷல்!
தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் மிகவும் குதூகலமாக இருக்கும். ஏனெனில் தீபாவளி அன்று வீட்டில் நமக்கு பிடித்த பலகாரங்களை செய்து குடும்பத்துடன் சாப்பிடலாம். அந்த வகையில் உங்களுக்கு குலாப் ஜாமூன் பிடித்தால், அதை இந்த வருடம் சற்று வித்தியாசமாக செய்து சுவைத்துப் பாருங்களேன்.
ஆம், இந்த வருடம் பிரட் ட்ரை குலாப் ஜாமூன் செய்து சுவையுங்கள். இது வித்தியாசமான சுவையுடன், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த பிரட் ட்ரை குலாப் ஜாமூனை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பால் பிரட் - 4 துண்டுகள்
மைதா - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 1/4 கப்
ரோஸ் எசன்ஸ் - 2 துளிகள்
பொடித்த சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சர்க்கரை பாகுவிற்கு...
சர்க்கரை - 1/4 கப்
தண்ணீர் - 1/4 கப்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பில் வைத்து, சர்க்கரை கரையும் வரை சூடேற்ற வேண்டும். நீரில் உள்ள சர்க்கரை முழுவதும் கரைந்து, சர்க்கரைப் பாகு ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
சர்க்கரை பாகு குளிர்ந்து வெதுவெதுப்பானதும், அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு பிரட் துண்டுகளை எடுத்து அதன் பக்கவாட்டில் உள்ள ப்ரௌன் நிற பகுதியை நீக்கிவிட வேண்டும்.
பின் ஒவ்வொரு பிரட் துண்டுகளையும் எடுத்து பாலில் நனைத்து பிழிந்து, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்த பிரட்டை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் சோடா உப்பு, மைதா சேர்த்து கைகளில் ஒட்டாத அளவில் நன்கு மென்மையாக பிசைந்து, பின் அதனை சிறு உருண்டைகளாக மென்மையாக உருட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
அனைத்து உருண்டைகளையும் பொரித்ததும், அவற்றை சர்க்கரை பாகுவில் சேர்த்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
இறுதியில் அந்த உருண்டைகளை எடுத்து, பொடித்த சர்க்கரையில் உருட்டினால், பிரட் ட்ரை குலாப் ஜாமூன் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
