For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடலை மாவு பர்பி - நவராத்திரி ஸ்பெஷல்!

|

இதோ நவராத்திரி ஏறக்குறைய வந்தே விட்டது. ஒவ்வொரு வீட்டிலும் அம்பிகையை வரவேற்கத் துவங்கியிருப்பீர்கள். இந்து மதத்தின் மாபெரும் கொண்டாட்டமான இதற்காக அனைத்து இந்து மக்களும் ஆர்வமுடன் காத்திருப்பர்.

தேவி துர்கையை வழிபட நவராத்திரி என்றால், இந்த பண்டிகை குஷியையும் மகிழ்ச்சியையும் ஒவ்வொருவருடைய வாழ்விலும் கொண்டு வரும். தீபங்கள், அலங்காரம், புதிய உடைகள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன

மேலும் இதுபோன்ற பெரு விழாக்களைக் கொண்டாடும் போது ஸ்பெஷலான உணவுகளை மறக்க முடியுமா என்ன? இந்தியாவில் சுவையான இனிப்புகளின்றி எந்த ஒரு விழாவும் முழுமை அடைவதில்லை.

எனவே இந்த நவராத்திரியில் இந்த கடலை மாவு பர்பி அல்லது பேஷன் கி பர்பி செய்து உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களை ஏன் குஷிப்படுத்தக்கூடாது?

சரி.... இதை செய்வது எப்படின்னு தானே யோசிக்கிறீங்க? இதை எளிய முறையில் செய்து துர்கைக்குப் படைக்க இதோ உங்களுக்கு எளிமையாகச் சொல்லித் தரப்போகிறோம். இதற்குத் தேவையான பொருட்களையும் முறையையும் பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு - 4 கப்

* சுத்தமான நெய் - 2 கப் (இளக வைக்க)

* பாதாம் பருப்பு : 10-12 (சீவல் அல்லது துண்டாக்கப்பட்டது)

* பிஸ்தா பருப்பு - 10-12 (சீவல் அல்லது துண்டாக்கப்பட்டது)

* சர்க்கரை - 2 கப் (தூளாக்கப்பட்டது)

* பச்சை ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1. ஆழமான வாணலியை எடுத்தது அதில் நெய்யாய் ஊற்றவும்

2. அது நன்கு கரைந்தவுடன் அதில் கடலை மாவை சேர்க்கவும்

3. நன்கு பொன்னிறமாக வரும்வரை தொடர்ச்சியாகக் கிளறவும்

4. கீழே அடி பிடிக்காத அளவிற்கு நன்றாகவும் தொடர்ச்சியாகவும் கிளற வேண்டியது அவசியம்

5. பாகு நல்ல பதத்திற்கு வந்தவுடன் ஏலக்காய் தூளை போடவும்

6. அடுத்து பிஸ்தா மற்றும் பாதாம் சேவலை அதில் சேர்த்துக் கிளறி ஸ்டவ்வை அணைக்கவும்

7. இந்த கலவையை வாணலியிலிருந்து ஒரு பெரிய பேசின் அல்லது பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்

8. பாகை சற்று சிறிதளவு கடினமாகும் வரை குளிரவிடுங்கள்

9 இந்த கலவையை மேலும் கிளறி அதில் சர்க்கரைத் தூளை (நன்கு மென்மையாகத் தூளாக்கிய) சேர்க்கவும்

10. இந்த கலவையை மேலும் கிளற பாகு நல்ல சமநிலைக்கு வரும்

11. இதை எந்த கட்டியும் இல்லாதவாறு பிசைந்து விடவும்

12. ஒரு தட்டையான பாத்திரத்தை எடுத்து அதில் நெய்யை எல்லா புறமும் தடவி விடவும்

13. இதற்கு கையை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்

14. பாத்திரத்தில் உள்ள கலவையை இந்த தட்டை பாத்திரம் அல்லது ட்ரேவிற்கு மாற்றவும்.

15. மேலே பாதாம் தூவல்களை தூவிப் பரப்பவும்

16. 2-3 மணி நேரத்திற்கு இதை அப்படியே விட்டு அதனை தேவையான வடிவங்களில் பரப்பியாக வெட்டி எடுக்கவும்

நவராத்திரி பரிபீ ரெடி. இதில் கோவா அல்லது மில்க்மெய்ட் சேர்ப்பதன் மூலம் நல்ல மிருதுவான இளகும் பதத்தில் பர்பியை பெறமுடியும். இதில் உலர்ந்த பழங்களை சேர்ப்பதன் மூலம் ட்ரி ப்ரூட் பர்பியாகவும் செய்யலாம்.

English summary

Besan Ki Barfi- Navratri Special

Navratri is a time to prepare some of the best sweets. Among which besan ki barfi is the simplest and easiest sweet recipe that you can prepare for Navratri.
Desktop Bottom Promotion