For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி /மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட் செய்வது எப்படி/யுகாதி ஸ்பெஷல் ரெசிபி

கொசம்பரி என்பது பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்ந்த சுவை மிகுந்த சாலட் ஆகும். நிறைய கொசம்பரி வகைகள் இருந்தாலும் இந்த ஸ்வீட் கார்ன் கொசம்பரி அற்புதமான சுவையை தருவதோடு ஏராளமான ஊட்டச்சத்துக்களை நமக்கு தரக

Posted By: R. SUGANTHI Rajalingam
|
ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி | மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட் செய்வது எப்படி | Boldsky

கொசம்பரி என்பது பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்ந்த சுவை மிகுந்த சாலட் ஆகும். அப்படியே ப்ரஷ்ஷான பழங்கள் மட்டும் காய்கறிகளை கொண்டு அதன் மேல் காரசாரமான இந்திய மசாலாக்களை தூவி நம் நாவிற்கு விருந்தளிக்க கூடியது. நிறைய கொசம்பரி வகைகள் இருந்தாலும் இந்த ஸ்வீட் கார்ன் கொசம்பரி அற்புதமான சுவையை தருவதோடு ஏராளமான ஊட்டச்சத்துக்களை நமக்கு தரக் கூடியது

மக்காச்சோளம், மாதுளை உடன் அப்படியே லெமன் ப்ளேவருடன் சாப்பிடும் போது இதன் சுவையே தனி தான். மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஒரு அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்படுவதோடு புற்று நோய் மற்றும் இதய நோய்களை தடுக்கிறது. மக்காச் சோளத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வயதாகுவதை தடுத்தல், இரத்த ஓட்டத்தை அதிகரித்தல், கூந்தல் வளர்ச்சிக்கு உதவுதல் போன்ற ஏராளமான நன்மைகளையும் நமக்கு தருகிறது.

இந்த ரெசிபியை ஐந்தே ஐந்து நிமிடத்தில செய்து விடலாம். யுகாதி ஸ்பெஷல் ரெசிபியும் கூட. சுவை மிகுந்த இந்த கொசம்பரியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

Sweet Corn Kosambari recipe
ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி /மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட் செய்வது எப்படி/யுகாதி ஸ்பெஷல் 5 நிமிட ரெசிபி/ஸ்வீட் கார்ன் சாலட் ரெசிபி /ஸ்வீட் கார்ன் கொசம்பரி செய்முறை விளக்கம் /ஸ்வீட் கார்ன் கொசம்பரி வீடியோ.
ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி /மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட் செய்வது எப்படி/யுகாதி ஸ்பெஷல் 5 நிமிட ரெசிபி/ஸ்வீட் கார்ன் சாலட் ரெசிபி /ஸ்வீட் கார்ன் கொசம்பரி செய்முறை விளக்கம் /ஸ்வீட் கார்ன் கொசம்பரி வீடியோ.
Prep Time
5 Mins
Cook Time
5M
Total Time
10 Mins

Recipe By: காவ்யா

Recipe Type: சாலட்

Serves: 2

Ingredients
  • மக்காச்சோளம் - 1 பெளல்

    எண்ணெய் - தாளிப்பதற்கு

    கடுகு - 1 டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லி இலை(நறுக்கியது) - ஒரு கைப்பிடியளவு

    பச்சை மிளகாய்(நறுக்கியது) - 1

    மாதுளை - 1/4 கப்

    லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்

    தேங்காய்-1/2 கப்

    உப்பு - சுவைக்கேற்ப

    மிளகு (நுனிக்கியது) - 1 டீ ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
  • ஒரு கடாயை எடுத்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் எண்ணெய்யை ஊற்றி கொள்ளுங்கள்

    கடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளித்து மக்காச்சோளம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

    நுனிக்கிய மிளகுத்தூள், லெமன் ஜூஸை மேலே தூவி விட வேண்டும்

    எல்லாவற்றையும் நன்றாக கலந்து ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்

    இன்னும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து கொத்தமல்லி இலைகளை அதன் மேல் தூவி இறக்குங்கள்

    சுவையான ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி ரெடி

Instructions
  • நீங்கள் ப்ரஷ்ஷான மக்காச்சோளத்தை பயன்படுத்த விரும்பினால் சமைக்காமல் அப்படியே சாலட் உடன் கலந்து கொள்ளுங்கள்.
  • இந்த சாலட்டை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பச்சை மிளகாய் சேர்க்காமல் லெமன் ஜூஸ் மட்டும் சேர்த்து கொடுங்கள்.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 கப்
  • கலோரிகள் - 170 கலோரிகள்

படத்துடன் செய்முறை விளக்கம் :ஸ்வீட் கார்ன் கொசம்பரி செய்வது எப்படி

ஒரு கடாயை எடுத்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் எண்ணெய்யை ஊற்றி கொள்ளுங்கள்

கடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளித்து மக்காச்சோளம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.

நுனிக்கிய மிளகுத்தூள், லெமன் ஜூஸை மேலே தூவி விட வேண்டும்

எல்லாவற்றையும் நன்றாக கலந்து ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்

இன்னும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து கொத்தமல்லி இலைகளை அதன் மேல் தூவி இறக்குங்கள்

சுவையான ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி ரெடி

[ 4.5 of 5 - 67 Users]
Read more about: recipes
English summary

Sweet Corn Kosambari Recipe | How To Make Corn Pomegranate Kosambari Salad | Ugadi Special Easy Salad Recipe

Sweet Corn Kosambari is one of the most renowned salad recipes of Karnataka that can be made within 5 minutes, yet lending you a flavourful bowl of salad, enriched with nutrients. Made with mainly 3 ingredients - pomegranates, corn and lime juice - this sumptuous salad works as an anti-ageing secret, which also helps you to prevent cancer and major heart diseases.
Desktop Bottom Promotion