Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும்
Sweet Corn Masala Recipe in Tamil: பெரும்பாலும் உங்கள் வீடுகளில் இரவு சப்பாத்தி தான் உங்கள் வீட்டில் டின்னராக இருக்குமா? அந்த சப்பாத்திக்கு வழக்கமான உருளைக்கிழங்கு குருமா அல்லாமல் ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஸ்வீட் கார்ன் உள்ளதா? அப்படியானால் அந்த ஸ்வீட் கார்னை வைத்து வழக்கமான சைடிஷ் இல்லாமல் ஒரு புதுவிதமான சைடிஷை முயற்சி செய்து பாருங்கள்.

இந்த ஸ்வீட் கார்ன் மசாலா தோசை, சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த ஸ்வீட் கார்ன் மசாலா சுவையானது மட்டுமின்றி மிகவும் ஆரோக்கியமானதும் கூட.
உங்களுக்கு சுவையான ஸ்வீட் கார்ன் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- உதிர்த்த ஸ்வீட் கார்ன் -1 கப்
- பெரிய வெங்காயம் - 3
- தக்காளி - 2
- குடைமிளகாய் - 3 ஸ்பூன்
- பூண்டு - 5 பல்
- தயிர் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
- சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா - 1 ஸ்பூன்
- கசூரி மேத்தி - 2 சிட்டிகை
- முந்திரி - 10
- பால் - 1/4 கப்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- முதலில் ஸ்வீட் கார்னை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வெங்காயத்தையும், குடைமிளகாயையும் சதுரங்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- மற்றொரு வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். இன்னொரு வெங்காயத்தை அரைப்பதால் தோராயமாக நறுக்கிக் கொள்ளவும்.
- தக்காளியை இரண்டாக நறுக்கி, அதை மிக்ஸியில் அரைக்கவும்.
- முந்திரி பருப்பை சூடான நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- முந்திரி பருப்பு ஊறியதும் அதை வடிகட்டி பால் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாயைச் சேர்க்கவும்.
- சிறிது உப்பு சேர்த்து இவற்றை வதக்கவும். குடைமிளகாய் மென்மையாகிவிடாமல், மொறுமொறுப்பான தன்மையுடன் இருக்குமாறு வதக்கவும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.
- அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் பெரிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டைச் சேர்க்கவும்.
- இது லேசாக பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதையும் தனியாக எடுத்து வைக்கவும்.
- இதை முழுமையாக ஆறவிட்டு, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். இதனுடன் அரைத்த வெங்காய விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை இதனுடன் சேர்க்கவும்.
- அதன்பின் மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், உப்பு
மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
இதனுடன் தயிரைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
- பச்சை வாசனை போகும் வரை இதை மிதமான தீயில் 10 நிமிடங்கள் சமைக்கவும்.
- இப்போது ஸ்வீட் கார்ன் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். இதை 10 நிமிடங்கள் வேகவிடவும்.
- பின்னர் முந்திரிப் பால் கலவையைச் சேர்த்து, தீயைக் குறைத்து வைக்கவும்.
- அதன்பின் வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தைச் சேர்க்கவும்.
- கசூரி மேத்தியைக் கைகளால் கசக்கி இந்தக் கிரேவியில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான ஸ்வீட் கார்ன் மசாலா ரெடி.
- இந்த் மசாலா சப்பாத்தி, பூரி மற்றும் புலாவ் போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
