Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
1/2 கப் சேமியாவும், 1 மூடி தேங்காயும் வெச்சு.. சட்டென்று இந்த ஸ்வீட்டை செய்யுங்க... டேஸ்ட் அள்ளும்...
Sweet Coconut Semiya Recipe In Tamil: உங்கள் பிள்ளைகள் திடீரென்று சாப்பிட ஸ்வீட் கேட்கிறார்களா? ஆனால் வீட்டில் எந்த ஸ்வீட்டும் இல்லையா? கவலை வேண்டாம். வீட்டில் 1/2 கப் சேமியாவும், 1 மூடி தேங்காயும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான ஸ்வீட் செய்யலாம். இந்த ஸ்வீட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அருமையாக இருக்கும்.
ஒருவேளை உங்கள் வீட்டிற்கு திடீரென்று விருந்தினர் வந்துவிட்டால், அப்போது அவர்களுக்கு சாப்பிட ஏதாவது ஸ்வீட் செய்து கொடுக்க நினைத்தால், நிச்சயம் இதை செய்து கொடுக்கலாம். இந்த ஸ்வீட்டை செய்து கொடுத்தால், நிச்சயம் பாராட்டைப் பெறுவீர்கள். அதுவும் உங்கள் பிள்ளைகளுக்கு ஒருமுறை இந்த ஸ்வீட்டை செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு இந்த ஸ்வீட் தேங்காய் சேமியாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்வீட் தேங்காய் சேமியா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டீஸ்பூன்
* சேமியா - 1/2 கப்
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* சர்க்கரை - 1 கப்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* ஆரஞ்சு ஃபுட் கலர் - 1 சிட்டிகை
வதக்குவதற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* முந்திரி - 5 (பொடியாக நறுக்கியது)
* தேங்காய் - 1 மூடி (துருவியது)
* சர்க்கரை - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், சேமியாவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் 2 கப் நீரை ஊற்றி, 1 சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி,
சேமியாவை வேக வைக்க வேண்டும்.
* சேமியா வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து, அத்துடன் 1/4
டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் 1 சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலரை
சேர்த்து கிளறி, வற்றும் வரை வதக்கி இறக்கி ஒரு தட்டில் போட்டு, குளிர
வைக்க வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய்
சேர்த்து உருகியதும், அதில் பொடியாக நறுக்கிய முந்திரியை சேர்த்து
பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து, பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* பின்பு அதில் 2 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள
சேமியாவை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான ஸ்வீட் தேங்காய்
சேமியா தயார்.



Click it and Unblock the Notifications
