Latest Updates
-
இந்த 6 உணவுகளை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா சிறுநீரக கற்கள் வந்துவிடும்.. -
பெங்காலி ஸ்டைல் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
2027-ல் ராகு-கேதுவால் கஷ்டங்கள் தீர்ந்து, செழிப்பான வாழ்க்கையை வாழப்போகும் 6 ராசிக்காரங்க இவங்க தான்! -
உலகம் முழுக்க பிறந்த நாளுக்கு ஏன் கேக் வெட்டி மெழுகுவர்த்தியை ஊதுகிறார்கள்? அதன் வரலாறு என்ன தெரியுமா? -
1 முள்ளங்கியும், அரிசி மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது! -
நவம்பர் 27, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
நவம்பர் இறுதியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
முட்டையை எப்பவும் ஒரே மாதிரி மசாலா செய்யாம.. ஒருடைம் இப்படி கீமா மசாலா செய்யுங்க.. -
தலைமுடி வறண்டும், அதிக சிக்கலுடனும் இருக்கா? அப்ப இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் 1 முறை போடுங்க.. -
12 ராசிக்காரர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் ஸ்டைல் எப்படி இருக்கும்? உங்க ராசிப்படி நீங்க எப்படின்னு பாருங்க..
சுரைக்காய் இருந்தா.. இப்படி ஒருடைம் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட அடிக்கடி செய்ய சொல்லி கேட்பாங்க..
Suraikkai Thayir Pachadi Recipe In Tamil: தினமும் மதியம் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? மதியம் சமைக்க சோம்பேறித்தனமாக உள்ளதா? அப்போது சட்டென்று சமையலை முடிக்கக்கூடிய வகையில் ஒரு ஈஸியான ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுரைக்காய் கொண்டு தயிர் பச்சடி செய்யுங்கள். இந்த பச்சடியை செய்தால் சுரைக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் சுரைக்காயை துருவி சேர்த்தால், பிள்ளைகள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த பச்சடி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த சுரைக்காய் தயிர் பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் தயிர் பச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* சுரைக்காய் - 1 (பொடியாக நறுக்கியது அல்லது துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/4 டம்ளர்
அரைப்பதற்கு...
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - சிறிய துண்டு
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
வதக்குவதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புளிப்பில்லாத கெட்டி தயிர் - 200 மிலி
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கியோ
அல்லது துருவியோ எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சுரைக்காயை எடுத்துக்
கொண்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/4 டம்ளர் நீரை ஊற்றி
நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து, 4-5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* சுரைக்காய் நன்கு வெந்ததும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம்
சேர்த்து கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கி
இறக்க வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சுரைக்காயை எடுத்துக் கொள்ள
வேண்டும். பின் அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் புளிப்பில்லாத கெட்டி தயிரை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும். உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து கலந்து
கொண்டால், சுவையான சுரைக்காய் தயிர் பச்சடி தயார்.



Click it and Unblock the Notifications
