கல்யாண வீட்டு சுரைக்காய் அல்வா ரெசிபி... ஒருதடவ செஞ்சு பாருங்க... அப்புறம் அடிக்கடி செய்வீங்க...!

Posted By:

Suraikai Halwa Recipe in Tamil: கல்யாண விருந்து எப்போதுமே கொஞ்சம் ஸ்பெஷலானதுதான். ஏனெனில் நாம் வழக்கமாக சாப்பிடும் உணவுகள் கூட கல்யாண விருந்தில் சாப்பிடும் போது கூடுதல் சுவையானதாக இருக்கும். கல்யாண பந்தியில் முதலில் வைக்கப்படுவது இனிப்புதான். கடந்த காலங்களில் ஆரம்பத்தில் கேசரி வைக்கப்படும் அல்லது இறுதியாக பாயாசம் பரிமாறப்படும்.

இப்போது பல்வேறு விதமான இனிப்புகள் வைக்கப்படுகின்றன. குறிப்பாக வெவ்வேறு விதமான அல்வாக்கள் பரிமாறப்படுகின்றன. அதில் இப்போது பிரபலமாகி வரும் ஒரு அல்வாதான் சுரைக்காய் அல்வா. வழக்கமான அல்வா சுவையிலிருந்து வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த அல்வா செய்வது எளிதானது மற்றும் சுவையானது. இந்த கல்யாண வீட்டு சுரைக்காய் அல்வாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Suraikai Halwa Recipe How to Prepare Bottle Gourd Halwa

தேவையானப் பொருட்கள்:

- 750 கிராம் சுரைக்காய் (தோல் நீக்கி விதை நீக்கியது)
- 1.5 லிட்டர் முழு கொழுப்புள்ள பால்
- கால் கப் நெய்
- 1/3 கப் பாதாம், முந்திரி மற்றும் திராட்சை
- ஒன்றரை கப் சர்க்கரை
- ஒரு சிட்டிகை பச்சை நிற புட் கலர்
- 2 தேக்கரண்டி நெய் (இறுதியாக சேர்க்க)

செய்முறை:

- சுரைக்காயை தோல் சீவி விதைகளை நீக்கி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும். துருவிய சுரைக்காயில் இருந்து தண்ணீரை முழுமையாக பிழிந்து எடுத்து விடவும்.

- அடி கனமான பாத்திரத்தில் 1.5 லிட்டர் முழு கொழுப்புள்ள பாலை கொதிக்க வைக்கவும்.

- பால் நன்றாக கொதித்து 500 மில்லியாகக் குறையும் வரை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். கெட்டியான பாலை ஓரமாக வைக்கவும்.

- ஒரு பாத்திரத்தில் கால் கப் நெய்யை சூடாக்கவும். பின்னர் அதில் நறுக்கிய பாதாம், முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்க்கவும். பொன்னிறமாக மணம் வரும் வரை வறுக்கவும், பின்னர் அவற்றை எடுத்து தனியாக வைக்கவும்.

- பின்னர் அதே பாத்திரத்தில், பிழிந்து வைத்திருக்கும் சுரைக்காயைச் சேர்க்கவும். அவ்வப்போது கிளறி, அனைத்து ஈரப்பதமும் ஆவியாகும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.

- சுரைக்காய் நன்கு குலைந்து வந்ததும் அதில் ஒன்றரை கப் சர்க்கரையை சேர்க்கவும். இதை நன்கு கலந்து, 10 நிமிடங்கள் மிதமான தீயில், கலவை கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

- பின்னர் கொதிக்கவைக்கப்பட் பாலை ஹல்வா கலவையில் ஊற்றவும். நன்கு கிளறி, 5-7 நிமிடங்கள் மிதமான தீயில், அல்வா பாலை உறிஞ்சி ஒரு நிலைத்தன்மையை அடையும் வரை தொடர்ந்து கிளறவும்.

- நீங்கள் விரும்பினால் பச்சை நிற புட் கலரை சேர்த்து கிளறவும். இது முழுக்க முழுக்க உங்களின் விருப்பம் சார்ந்தது மட்டுமே.

- பின்னர் வறுத்த பாதாம், முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து அல்வாவை அடிபிடிக்கமால் நன்கு கிளறவும். இறுதியாக 2 ஸ்பூன் நெய்யை சேர்க்கவும்.

- சூடான, சுவையான சுரைக்காய் அல்வா ரெடி. இதை மிதமான சூட்டில் சாப்பிட பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Saturday, February 15, 2025, 18:25 [IST]
Desktop Bottom Promotion