Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
1 கப் சுண்டல் இருந்தா இந்த வடையை செஞ்சு பாருங்க... இதுவரை நீங்கள் சாப்பிடாத சுவையில் சூப்பரா இருக்கும்...!
Sundal Vada Recipe in Tamil: தற்போது வானிலை மிகவும் ஜில்லென்று இருக்கிறது. எனவே மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது சூடாகவும், காரசாரமாவும், மொறுமொறுவென்றும் ஏதாவது சாப்பிடத் தோன்றும். உங்கள் வீட்டில் உள்ளோர் மாலை வேளையில் சாப்பிட வடை, பஜ்ஜி ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? ஆனால் வீட்டில் வடை சுட கடலை மாவு இல்லையா?
உங்கள் வீட்டில் ஒரு கப் சுண்டல் உள்ளதா? அப்படியானால் அதை வைத்து சுவையான வடையை சுட்டுக் கொடுங்கள். இந்த வடையானது பருப்பு வடை போலவே நன்கு மென்மையாகவும், மொறுமொறுவென்றும் இருக்கும். முக்கியமாக இந்த வடை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கொண்டைக்கடலையை வைத்து மொறுமொறுப்பான வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொண்டைக்கடலை வடையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- கருப்பு அல்லது வெள்ளை சுண்டல் - ஒரு கப்
- பெரிய வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 1
- காய்ந்த மிளகாய் - 1
- இஞ்சி - ஒரு துண்டு
- பூண் பல் - 3
- பெருஞ்சீரகம் - அரை ஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
- கொண்டைக் கடலையை முதல் நாளிரவே ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் நீரை வடித்து தனியாக வைத்து விடவும்.
- மிக்ஸியில் ஊறவைத்த கொண்டைக்கடலையை எடுத்துக் கொண்டு, அதனுடன் பச்சை மிளகாய், வர மிளகாய், இஞ்சி, பூண்டு, பெருஞ்சீரகம் அனைத்தையும் போட்டு தண்ணீர் விடாமல், இரண்டு மூன்று மென்மையான மாவாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாகப் பிசையவும்.
- உப்பு, காரம் சரிபார்த்துக்கொள்ளவும். காரம் தேவையெனில் இன்னொரு பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப் போட்டு மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- ஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வடை மாதிரியோ அல்லது கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- இது கடலைப் பருப்பு வடையைவிட மென்மையாகவும்,சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது. இதற்கு சிறந்த காம்பினேஷன் என்றால் அது தேங்காய் சட்னிதான்.



Click it and Unblock the Notifications










