கொழுப்பு குறைய, வயிற்றுப்புண் ஆற சுண்டக்காயை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. கசப்பும் தெரியாது.. ருசியானதும் கூட..

Posted By:

Sundakkai Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் யாரும் சுண்டக்காய் சாப்பிடமாட்டார்களா? எப்போது சுண்டக்காய் செய்தாலும், அதை நீங்கள் மட்டும் தான் சாப்பிடுவீர்களா? இதற்கு அதன் கசப்புச்சுவை தான் காரணம். ஆனால் இந்த கசப்புச்சுவை தெரியாமலேயே அருமையான சுவையில் சுண்டக்காயை சமைக்கலாம். இதுவரை நீங்கள் சுண்டக்காயைக் கொண்டு புளிக்குழம்பு தான் செய்திருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு இந்த பக்குவத்தில் பொரியல் செய்தால், சுண்டக்காய் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Sundakkai Poriyal How To Make Turkey Berry Poriyal Recipe

உங்களுக்கு இந்த சுண்டக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுண்டக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* சுண்டக்காய் - 200 கிராம்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் சுண்டக்காயை தட்டி நீரில் போட்டு 2 முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சுண்டக்காயை சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுண்டக்காய் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10-15 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.
* சுண்டக்காய் நன்கு வெந்து நீர் வற்றியதும், அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சுண்டக்காய் பொரியல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 27, 2026, 14:12 [IST]
Desktop Bottom Promotion