Latest Updates
-
கொளுத்தும் வெயிலால் உங்கள் முடி உடையாமல், கொட்டாமல் இருக்க இந்த எளிய உணவுகளை சாப்பிடுங்க -
வாஸ்து படி இந்த 5 இடங்களில் கடிகாரத்தை மாட்டுவது உங்களை துரதிர்ஷ்டசாலியாக மாற்றுமாம் -
புதன்-சூரியன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பிரியாணியை விட சூப்பரா இருக்கும் தக்காளி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
150 ஆண்டுக்கு மேல் வாழும் பாகிஸ்தானின் ரகசிய இனக்குழு பெண்கள் - இவர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன தெரியுமா? -
கோதுமை ரவா பொங்கலும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குதூகலமான நாளாக இருக்குமாம் -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-செவ்வாய்: மே 10 வரை இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
குருபகவான் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
கர்நாடகா பேமஸ் குடைமிளகாய் தக்காளி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
வெயிலை சமாளிக்க உதவும் சுவையான தர்பூசணி தோல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
Summer Special Watermelon Rind Chutney in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி அல்லது தோசைதான் காலை உணவாக அல்லது இரவு உணவாக இருக்குமா? அதற்கு வழக்கமான சைடிஷ் செய்யாமல் ஏதாவது புது சைடிஷ் செய்ய விரும்புகிறீர்களா? இது கோடைகாலம் என்பதால் அனைவரின் வீட்டிலும் தர்பூசணி வாங்குவோம். தர்பூசணி வாங்கினால் அதில் உள்ள வெள்ளைப்பகுதியை நாம் தூக்கியெறிந்து விடுவோம்.
ஆனால் இந்த வெள்ளைப் பகுதியை வைத்து இட்லி, தோசைக்கு ஒரு சூப்பரான சைடிஷை செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? உண்மைதான் தர்பூசணியின் இந்த பகுதியை வைத்து சுவையான சட்னி செய்யலாம். இது கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். இட்லி, தோசைக்கு வழக்கமான சைடிஷ் செய்யாமல் புதிதாக ஒரு சட்னியை செய்ய விரும்புகிறவர்கள் இதை தாராளமாக முயற்சிக்கலாம். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதுடன் சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு தர்பூசணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தர்பூசணி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ½ ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 கப் தர்பூசணியின் வெள்ளைப்பகுதி
- ½ கப் நறுக்கிய தக்காளி
- புளி சிறிதளவு
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
- ½ ஸ்பூன் பெருங்காயம்
- 3 ஸ்பூன் தேங்காய்
- ½ ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- அரை ஸ்பூன் கடுகு
- சிறிதளவு வெந்தயம்
- 3 வர மிளகாய்
செய்முறை:
- ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, வர மிளகாய், வெந்தயம் மற்றும் கடுகு ஆகியவற்றை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் அதே கடாயில் மீண்டும் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதன்பின் நறுக்கிய தக்காளி மற்றும் நறுக்கிய தர்பூசணித் தோலைச் சேர்த்து, அவற்றின் நிறம் லேசாக மாறும் வரை வதக்கவும்.
- அதன்பின் புளி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். இதை மூடி வைத்து, தோல் மென்மையாகும் வரை சமைக்கவும்.
- பின்னர் பெருங்காயம் மற்றும் தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து, தேங்காய் நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் வறுத்த பொருட்கள் முழுமையாக ஆறும் வரை காத்திருக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் முதலில் வறுத்த பருப்பு மற்றும் வர மிளகாயை சேர்த்து அரைக்கவும்.
- பின்னர் வதக்கிய தக்காளி மற்றும் தர்பூசணி தோலை சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி தேவைப்பட்டால் தாளித்துக் கொள்ளவும்.
- அவ்வளவுதான் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் தர்பூசணி சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications