Latest Updates
-
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
பொங்கலுக்கு வாங்குன கரும்பு இன்னும் இருந்தா.. ஈவ்னிங் இப்படி செஞ்சு சாப்பிடுங்க..
Sugarcane Wheat Flour Kozhukattai Recipe In Tamil: பொங்கலுக்கு வாங்கிய கரும்பு இன்னும் உங்கள் வீட்டில் உள்ளதா? அப்படியானால் அந்த கரும்பை வீணக்கடிக்காமல் அதைக் கொண்டு அருமையான சுவையில் ஸ்நாக்ஸை செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் பசியுடன் வரும் போது, அவர்களின் பசியைப் போக்கும் வகையிலும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். இந்த ஸ்நாக்ஸ் செய்வதற்கு கரும்புடன், கோதுமை மாவை சேர்த்து கொழுக்கட்டை செய்யுங்கள். இது சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.

உங்களுக்கு கரும்புச்சாறு கோதுமை கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கரும்புச்சத்து கோதுமை கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கரும்பு - 3 (3/4 அடி நீளமுள்ள துண்டு)
* தண்ணீர் - 300 மிலி
* கோதுமை மாவு - 2 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை - 1/4 கப்
* தேங்காய் - 1/2 மூடி (பொடியாக நறுக்கியது)
* நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கரும்பின் மேல் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் துண்டுகளாக்கப்பட்ட கரும்பை மிக்சர் ஜாரில்
போட்டு, முதலில் ஒருமுறை அரைக்க வேண்டும். அதன் பின் அதில் 300 மிலி
நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை வடிகட்டி சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கோதுமை மாவை சேர்த்து 2
நிமிடம் வறுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வறுத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் உப்பு
மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து
கைகளால் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கரும்பு சாற்றினை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு கையில் நெய்யை தடவி, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி,
பிடிக்கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைக்க
வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதனுள் இட்லி தட்டை வைத்து மூடி, 10
நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான கரும்புச்சாறு கோதுமை
கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications