Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
2 தக்காளியும், 1 கைப்பிடி வேர்க்கடலையும் வெச்சு, எண்ணெய் சேர்க்காம இப்படி சட்னி செய்யுங்க.. சுவை அள்ளும்...
Steamed Tomato Peanut Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? அந்த இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளியும், வேர்க்கடலையும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில், அதுவும் ஆவியில் பொருட்களை வேக வைத்து, அரைத்து சட்னி செய்யுங்கள்.
இந்த சட்னி நிச்சயம் வழக்கமாக செய்யும் சட்னியின் சுவையில் இருந்து வேறுபட்டிருக்கும். முக்கியமாக இந்த சட்னி ஆரோக்கியமானது என்றும் கூறலாம். இந்த சட்னி டயட்டில் இருப்போருக்கு ஏற்ற சட்னி. இந்த சட்னியை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். அந்த அளவில் இதன் சுவை அருமையாக இருக்கும்.

உங்களுக்கு ஆவியில் வேக வைத்த தக்காளி வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பூண்டு - 1 கைப்பிடி
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* வரமிளகாய் - 5
* பச்சை வேர்க்கடலை - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - கொத்து
செய்முறை:
* முதலில் இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து
சூடேற்ற வேண்டும்.
* பின் இட்லி தட்டில் நறுக்கிய தக்காளி, பூண்டு பற்கள், நறுக்கிய
வெங்காயம், வரமிளகாய் மற்றும் 1 கைப்பிடி பச்சை வேர்க்கடலையை வைக்க
வேண்டும்.
* பின்பு அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து மூடி, 15
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்ததும், மூடியைத் திறந்து, இட்லி தட்டை வெளியே
எடுத்து, பொருட்களை குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வேக வைத்த பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் நீரை
ஊற்றி அலசி சட்னியுடன் ஊற்றி கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான தக்காளி வேர்க்கடலை சட்னி தயார்.



Click it and Unblock the Notifications