Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
ஸ்ரீலங்கா ஸ்டைல் ரசம் எப்படி செய்வது என்று தெரியுமா?
உங்களுக்கு ஸ்ரீலங்கா ஸ்டைல் ரசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்ரீலங்கா ஸ்டைல் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ரசம் என்றால் அதில் தக்காளியும், ரசப்பொடியும் இருக்கும். ஆனால் இந்த இரண்டும் இல்லாமலேயே ரசம் செய்யலாம் தெரியுமா? ஆம், ஸ்ரீலங்காவில் ரசமானது தக்காளி, ரசப்பொடி எதுவும் சேர்க்காமல் செய்யப்படுமாம். முக்கியமாக இந்த ரசத்தில் வெங்காயம் சேர்க்கப்படும். இந்தியர்களின் உணவில் ரசத்திற்கு முக்கிய பகுதி உண்டு. மதிய வேளையில் ரசம் சாப்பிட்டால் தான் நிறைய பேருக்கு சாப்பிட்ட உணர்வே இருக்கும். மேலும் ரசமானது பல்வேறு மசாலா பொருட்களைக் கொண்டுள்ளதால், அது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கிறது. தினமும் ஒரு கப் ரசம் குடித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும், மலச்சிக்கல் தடுக்க்ப்படும், கர்ப்பிணிளுக்கு நல்லது, ஏன் எடை இழப்பிற்கு கூட உதவும்.

உங்களுக்கு ஸ்ரீலங்கா ஸ்டைல் ரசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்ரீலங்கா ஸ்டைல் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
* பூண்டு - 4-6 பல் (நறுக்கியது)
* இஞ்சி - ஒரு சிறிய துண்டு
* மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1-2
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி நீர் - 350 மிலி
* தண்ணீர் - 350 மிலி
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, வரமிளகாய், சோம்பு, சீரகம், மல்லி மற்றும் மிளகு ஆகியவற்றை போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் புளிச்சாறு மற்றும் நீரை ஊற்ற வேண்டும்.
* அதன் பின் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி, 3 நிமிடம் உயர் தீயில் வைத்து மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, ஒரு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, பெருங்காயத் தூள் சேர்த்து கிளறினால், சுவையான ஸ்ரீலங்கா ஸ்டைல் ரசம் தயார்.



Click it and Unblock the Notifications











