இந்த தீபாவளிக்கு காரசாரமான மைதா பிஸ்கட் ரெசிபி செஞ்சு அசத்துங்க!!

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

காரசாரமான மைதா பிஸ்கட் ரெசிபி இந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகையாகும். இந்த ரெசிபி மகராஷ்டிராவில் இருந்து வந்தது. மேலும் இது நமக் பரா என்றும் அழைக்கப்படுகிறது. இதை மாலை நேர தேநீர் வேளைக்கும் பண்டிகை களின் போதும் அதிகமாக தயாரிப்பர்.

நல்ல காரசாரமான மாவை டைமண்ட் வடிவத்தில் செய்து எண்ணெயில் போட்டு மொறு மொறுவென பொரித்து செய்யும் ஸ்நாக்ஸ் ஆகும். இந்த கர சங்கரா போளியை அப்படியே மொறு மொறுப்பாக கடித்து கொண்டு கையில் சூடான டீயுடன் ஒரு சிப் பருகி கொண்டு உங்கள் மழைக்காலத்தை கழிக்கும் போது கிடைக்கும் சுவையே தனி தான்.

இந்த காரசாரமான மைதா பிஸ்கட்யை தயாரிப்பது எளிமையாக இருப்பதோடு குறைந்த நேரம் மட்டுமே ஆகும். பொரிப்பதற்கு மட்டுமே கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்து கொள்ளும். மற்ற படி மிகவும் சுலபமான ரெசிபி ஆகும். நீங்கள் இதை வீட்டில் செய்ய நினைத்தால் பின்வரும் வீடியோ மற்றும் செய்முறை விளக்கத்தை காணுங்கள்.

காரசாரமான மைதா பிஸ்கட் வீடியோ ரெசிபி

spicy shankarpali recipe
காரசாரமான மைதா பிஸ்கட் ரெசிபி / வீட்டிலேயே நமக் பரா செய்வது எப்படி /நமக்கீன் மைதா பிஸ்கட் ரெசிபி /கர சங்கரா போளி
காரசாரமான மைதா பிஸ்கட் ரெசிபி / வீட்டிலேயே நமக் பரா செய்வது எப்படி /நமக்கீன் மைதா பிஸ்கட் ரெசிபி /கர சங்கரா போளி
Prep Time
10 Mins
Cook Time
40M
Total Time
50 Mins

Recipe By: காவ்யா ஸ்ரீ

Recipe Type: ஸ்நாக்ஸ்

Serves: 1 பெளல்

Ingredients
 • மைதா - 1/2 கப்

  சிவப்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

  உப்பு - தேவைக்கேற்ப

  எண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன் +பொரிப்பதற்கு

  தண்ணீர் - 8 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
  1. மைதாவை ஒரு அகலமான பெளலில் எடுத்து கொள்ளவும்
  2. அதனுடன் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்
  3. பிறகு அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்
  4. சூடுபடுத்திய எண்ணெய்யை மாவுக் கலவையுடன் சேர்க்கவும்
  5. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவை மிதமான மென்மையான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  6. இப்பொழுது 5 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்
  7. மாவை சரிசமமாக பிரித்து எடுத்து பந்து போல் உருண்டையாக உருட்டி கொள்ளுங்கள்
  8. பூரி பலகையில் வைத்து ரொட்டி மாதிரி தேய்த்து கொள்ளவும்
  9. இப்பொழுது ரொட்டியை செங்குத்தாக கோடுகளாக வெட்டவும். பிறகு சரிவாக வெட்டி டைமண்ட் வடிவ சிறிய துண்டுகளை பெறவும்.
  10. அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு எண்ணெய்யை சூடுபடுத்த வேண்டும்.
  11. இப்பொழுது ஒவ்வொரு டைமண்ட்டாக ஒன்றன்பின் ஒன்றாக போட்டு பொரிக்க வேண்டும்
  12. மிதமான தீயில் பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்
  13. பிறகு 5 நிமிடங்கள் ஆற வைத்து பரிமாறவும்
Instructions
 • 1. மாவை நன்றாக மென்மையாக அடித்து பிசைந்து கொண்டால் இன்னும் நன்றாக வரும்
 • 2. மிதமான தீயில் வைத்து பொரித்தால் மைதா பிஸ்கட் கருகுவதை தடுக்கலாம்
 • 3. இதை காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து சில வாரங்கள் கூட பயன்படுத்தி கொள்ளலாம்.
Nutritional Information
 • பரிமாறும் அளவு - 1 கப்
 • கலோரிகள் - 562 கலோரிகள்
 • கொழுப்பு - 21 கிராம்
 • புரோட்டீன் - 9.1 கிராம்
 • கார்போஹைட்ரேட் - 81.3 கிராம்
 • நார்ச்சத்து - 2.4 கிராம்

படத்துடன் செய்முறை விளக்கம் : காரசாரமான மைதா பிஸ்கட் செய்வது எப்படி

1. மைதாவை ஒரு அகலமான பெளலில் எடுத்து கொள்ளவும்

spicy shankarpali recipe

2. அதனுடன் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்

spicy shankarpali recipe
spicy shankarpali recipe

3. பிறகு அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

spicy shankarpali recipe

4. சூடுபடுத்திய எண்ணெய்யை மாவுக் கலவையுடன் சேர்க்கவும்

spicy shankarpali recipe
spicy shankarpali recipe

5. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவை மிதமான மென்மையான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

spicy shankarpali recipe
spicy shankarpali recipe

6. இப்பொழுது 5 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்

spicy shankarpali recipe

7. மாவை சரிசமமாக பிரித்து எடுத்து பந்து போல் உருண்டையாக உருட்டி கொள்ளுங்கள்

spicy shankarpali recipe
spicy shankarpali recipe

8. பூரி பலகையில் வைத்து ரொட்டி மாதிரி தேய்த்து கொள்ளவும்

spicy shankarpali recipe

9. இப்பொழுது ரொட்டியை செங்குத்தாக கோடுகளாக வெட்டவும். பிறகு சரிவாக வெட்டி டைமண்ட் வடிவ சிறிய துண்டுகளை பெறவும்.

spicy shankarpali recipe
spicy shankarpali recipe

10. அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு எண்ணெய்யை சூடுபடுத்த வேண்டும்.

spicy shankarpali recipe

11. இப்பொழுது ஒவ்வொரு டைமண்ட்டாக ஒன்றன்பின் ஒன்றாக போட்டு பொரிக்க வேண்டும்

spicy shankarpali recipe

12. மிதமான தீயில் பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்

spicy shankarpali recipe

13. பிறகு 5 நிமிடங்கள் ஆற வைத்து பரிமாறவும்

spicy shankarpali recipe
[ of 5 - Users]
Story first published: Thursday, October 19, 2017, 12:15 [IST]
Subscribe Newsletter