For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்படி பண்ணினாலும் வெண்பொங்கல் சப்புன்னு இருக்கா? இப்படி செஞ்சு பாருங்க!!

தென்னிந்திய மக்களின் விருப்பமான உணவு இந்த காரசாரமான வெண் பொங்கல் ஆகும். இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

Posted By: R. SUGANTHI Rajalingam
|
காரசாரமான பொங்கல் செய்வது எப்படி | Spicy Pongal Recipe | Boldsky

பொங்கல் என்றாலே போதும் தென்னிந்திய மக்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் நெய் சொட்ட சொட்ட தயாரிக்கும் வெண் பொங்கல் என்றால் நாக்கில் எச்சில் ஊறாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இந்த காரசாரமான பொங்கல், சர்க்கரை பொங்கலுடன் சேர்த்து கடவுளுக்கு நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

தென்னிந்திய மக்கள் இந்த கார பொங்கலை காலை உணவாகவும் எடுத்துக் கொள்வர். பாசி பருப்பு, அரிசி மற்றும் காரசாரமான மசாலா பொருட்கள் கொண்டு செய்யப்படும் இந்த பொங்கலின் சுவை மிகவும் ருசியானது. அதிலும் மிதக்கும் நெய்யில் அப்படியே சாப்பிடும் போது உங்கள் நாவை சொட்ட போடச் செய்து விடும். இதனுடன் சாம்பார், சட்னி மற்றும் வடையை சைடிஸ் ஆக தொட்டு சாப்பிட்டால் இதன் சுவை இன்னும் பல மடங்கு பெருகும்.கண்டிப்பாக இந்த சுவை உங்கள் நாக்கை விட்டு அகலாது. சாப்பிட்ட பிறகு வயிறு நிறைந்த திருப்தியையும் ஏற்படுத்தி விடும்.

அப்படிப்பட்ட சுவை மிகுந்த காரசாரமான பொங்கலை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

Spicy Pongal Recipe: How To Prepare Khara Pongal At Home
வெண் பொங்கல் ரெசிபி
வெண் பொங்கல் ரெசிபி
Prep Time
10 Mins
Cook Time
25M
Total Time
35 Mins

Recipe By: காவ்யா ஸ்ரீ

Recipe Type: முதன்மை உணவு

Serves: 2-3 பேர்கள்

Ingredients
  • பாசிப்பருப்பு - 3/4 கப்

    அரிசி - 3/4 கப்

    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

    இஞ்சி - 1 அங்குலம் (துருவியது)

    கறி வேப்பிலை - 8-9

    பச்சை மிளகாய் - 5-6 கீறியது

    கொத்தமல்லி இலைகள் - 1/2 கப் (நறுக்கியது)

    நுனிக்கிய மிளகுத்தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்

    முந்திரி பருப்பு - 8-10 (உடைத்தது )

    மஞ்சள் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்

    உப்பு - 3/4 டேபிள் ஸ்பூன்

    நெய் - 11/4 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - 6 கப் +1 கப்

Red Rice Kanda Poha
How to Prepare
  • ஒரு பிரஷ்ஷர் குக்கரில் அரசியை எடுத்து கொள்ளவும்

    பாசிப்பருப்பை மிதமான தீயில் 3 நிமிடங்கள் வறுத்துக் கொள்ள வேண்டும்

    அதனுடன் 6 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்

    நன்றாக கலந்து மூடியால் மூடி விட வேண்டும்

    4-5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

    நன்றாக உருகும் வரை காத்திருக்க வேண்டும்

    அதனுடன் சீரகம் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும்

    இப்பொழுது துருவிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும்

    நன்றாக கிளறவும்

    பிறகு அதனுடன் பொடித்த மிளகு மற்றும் முந்திரி பருப்பு போன்றவற்றை சேர்க்கவும்

    கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்

    சமைத்த சாதம் மற்றும் பாசிப்பருப்பு கலவையை இதனுடன் சேர்க்கவும்

    பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி எல்லாம் நன்றாக கலக்கும் வரை கிளறவும்

    இதை ஒரு 5 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும்

    பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி கிளறவும்

    பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும்

    பிறகு பொங்கலை ஒரு பெளலிற்கு மாற்றி விடவும்

    சுடச்சுட சூடான வெண் பொங்கல் ரெடி

    பரிமாறவும்

Instructions
  • நன்றாக அரிசியை கழுவி பயன்படுத்தவும்
  • மிளகை முழுதாகவோ அல்லது நுனிக்கியோ பயன்படுத்தலாம்
  • நெய் சேர்க்கும் போது இதன் சுவை இன்னும் அதிகரிக்கும்
  • போதுமான தண்ணீர் சேர்ப்பது வெண் பொங்கல் சரியான பதத்திற்கு வர உதவும்.
  • தேங்காய் சட்னி, சாம்பார் மற்றும் வடையுடன் பரிமாறி சுவைத்தால் சூப்பராக இருக்கும்.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 பெளல்
  • கலோரிகள் - 263.6 கலோரிகள்
  • கொழுப்பு - 15. 9 கிராம்
  • புரோட்டீன் - 5.9 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 24.3 கிராம்
  • சர்க்கரை - 1.8 கிராம்
  • நார்ச்சத்து - 0.4 கிராம்

படத்துடன் செய்முறை விளக்கம் : காரசாரமான பொங்கல் செய்வது எப்படி?

ஒரு பிரஷ்ஷர் குக்கரில் அரசியை எடுத்து கொள்ளவும்

பாசிப்பருப்பை மிதமான தீயில் 3 நிமிடங்கள் வறுத்துக் கொள்ள வேண்டும்

அதனுடன் 6 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்

நன்றாக கலந்து மூடியால் மூடி விட வேண்டும்

4-5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

நன்றாக உருகும் வரை காத்திருக்க வேண்டும்

அதனுடன் சீரகம் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும்

இப்பொழுது துருவிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும்

நன்றாக கிளறவும்

பிறகு அதனுடன் பொடித்த மிளகு மற்றும் முந்திரி பருப்பு போன்றவற்றை சேர்க்கவும்

கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்

சமைத்த சாதம் மற்றும் பாசிப்பருப்பு கலவையை இதனுடன் சேர்க்கவும்

பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி எல்லாம் நன்றாக கலக்கும் வரை கிளறவும்

இதை ஒரு 5 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும்

பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி கிளறவும்

பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும்

பிறகு பொங்கலை ஒரு பெளலிற்கு மாற்றி விடவும்

சுடச்சுட சூடான வெண் பொங்கல் ரெடி

[ 4.5 of 5 - 77 Users]
English summary

Spicy Pongal Recipe: How To Prepare Khara Pongal At Home

Spicy Pongal Recipe: How To Prepare Khara Pongal At Home
Story first published: Saturday, January 13, 2018, 12:35 [IST]
Desktop Bottom Promotion