Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
தக்காளியை வேகவைச்சு இந்த ஸ்பெஷல் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க... எவ்வளவு தோசை சுட்டாலும் பத்தாது...!
Special Tomato Chutney Recipe in Tamil: காலை அல்லது மாலையில் பெரும்பாலான வீடுகளில் இட்லி அல்லது தோசைதான் பிரதான உணவாக இருக்கும். இட்லி அல்லது தோசை செய்வது மிகவும் எளிதானதாக இருக்கலாம் ஆனால் அதற்கு சைடிஷ் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
இட்லி, தோசைக்கு டக்கென்று ஒரு சட்னியை செய்ய வேண்டுமா? தினமும் இட்லி, தோசைக்கு சைடிஷ் செலக்ட் செய்வது ஒரு பெரிய வேலையாக இருக்கும். உங்களுக்காகவே ஒரு வித்தியாசமான சட்னி ரெசிபியை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.

அந்த வகையில் இன்று அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சட்னியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த சட்னியின் பெயர் வேகவைத்த தக்காளி சட்னி. நீங்கள் இதுவரை எத்தனையோ சுவையில் தக்காளி சட்னியை செய்திருப்பீர்கள். ஆனால் இந்த ஸ்டைலில் தக்காளி சட்னியை செய்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. இந்த அட்டகாசமான வேகவைத்த தக்காளி சட்னியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- பழுத்த தக்காளி - 3
- பெரிய வெங்காயம் - 1
- பூண்டு பல் - 4
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை - 4
- மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- தண்ணீர் - 1 கப்
தாளிக்க:
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க
செய்முறை:
- வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு பற்களை கழுவி நறுக்கிக் கொள்ளவும். அரைப்பதாக இருந்தால் தோராயமாக நறுக்கவும், இல்லையெனில் நன்றாக நறுக்கி, தக்காளியை வேக வைத்த பிறகு ஒரு கரண்டியால் மசித்துக் கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் நறுக்கிய பொருட்களை எடுத்து, கறிவேப்பிலை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, விசில் போட்டு வேகவிடவும்.
- மிதமான தீயில் வேகவைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- நீராவி முற்றிலும் வெளியேறிய பிறகு மூடியை அகற்றவும். அதிகப்படியான தண்ணீரை வடிகட்டி ஓரமாக வைத்துக் கொள்ளவும். தக்காளியை முழுவதுமாக ஆற விடவும்.
- தக்காளி, வெங்காயத்தை சூடாக இருக்கும்போது அரைக்க வேண்டாம். அது எல்லா இடங்களிலும் தெறிக்கும். எனவே அரைப்பதற்கு முன் கலவையை முழுவதுமாக குளிர வைக்கவும்.
- நீங்கள் தக்காளியை மசித்தால், சூடாக இருக்கும்போது அதைச் செய்யலாம். பெரும்பாலும் அரைத்துக் கொள்வது நல்லது.
- வடிகட்டிய தண்ணீரில் அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
- பின்னர் ஒரு கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றவும்.
- சட்னியை கெட்டியாகும் வரை சில நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சூப்பரான வேகவைத்த தக்காளி சட்னி ரெடி.
- சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும். கூடுதல் சுவைக்கு சட்னியில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடவும்.



Click it and Unblock the Notifications