குழந்தைகளுக்கான ஸ்பெஷல் டின்னர்.. வெஜிடபிள் சிச்சிடி செய்ய ரெசிபி..!

Posted By:

உங்கள் குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட விரும்புகிறார்களா? காய்கறிகள் சாப்பிடாதவர்களுக்கு ஸ்பெஷல் வெஜிடபிள் கிச்சிடி செய்து கொடுக்கலாம்.. இந்த செய்முறை மிகவும் எளிதானதுதான். மேலும் குழந்தைகளுக்காக செய்யப்படும் இந்த கிச்சிடி விருந்து சாதம், பருப்பு மற்றும் காய்கறிகளின் சிறப்பு கலவையாகவும் வழங்கப்படலாம், இது அதிக சுவையை அளிக்கும்..

இந்த கிச்சிடியில் உள்ள மற்றொரு முக்கியப் பொருள் இந்திய மசாலாப் பொருட்கள். நல்ல சுவையுடன் இருப்பதால், குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.. குழந்தைகளுக்கு ஸ்பெஷல் வெஜிடபிள் கிச்சிடி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

special-dinner-vegetable-khichdi-recipe-for-kids

தேவையான பொருட்கள்

சேமியா - 1 கப்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 3

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

உருளைக்கிழங்கு - 1

கேரட் - 1

பீன்ஸ் - 4

கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

பட்டை - 1

கிராம்பு - 5

பிரியாணி இலை - 2

கறிவேப்பிலை - 1 கொத்து

கொத்தமல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1. முதலில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து நீரை கொதிக்க விடவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து, கொதிக்கும் நீரில் அந்த சேமியாவைப் போட்டு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, இறக்கி மூடி தனியாக வைத்து கொள்ளவும். பின் நீரை வடித்து, ஒரு தட்டில் அந்த சேமியாவை பரப்பி, குளிர வைக்கவும்.

3. பின் மற்றொரு வாணலியில் நீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை போட்டு, வேக வைத்துக் கொள்ளவும்.

4. பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

மழை காலத்திற்கு ஏற்ற காரசாரமான சிக்கன் சூப் செய்ய ரெசிபி..!

5. வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

6. பின்னர் அதில் வேக வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மசாலா அனைத்தும் ஒன்று சேரும் வரை நன்கு கிளறவும்.

7. மசாலா அனைத்து காய்கறிகளுடன் ஒன்று சேர்ந்ததும், அதில் வேக வைத்த சேமியாவைப் போட்டு கிளறி, தீயை குறைத்து வைத்து, மூடி 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

8. இப்போது சுவையான சேமியா வெஜிடேபிள் கிச்சடி தயார்..

குறிப்பு: முக்கியமாக சேமியா குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும். அப்போதுதான் அந்த சுவை இருக்கும்.. நெய் தேவையென்றால் சேர்த்துக் கொள்ளலாம்..

[ of 5 - Users]
Story first published: Saturday, July 6, 2024, 18:40 [IST]
Desktop Bottom Promotion