Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
1 கப் மீல்மேக்கரும், 1/2 கப் கடலைப்பருப்பும் வெச்சு ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. நொடியில் காலியாகும்..
Mealmaker Vadai Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சுவையான ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் சற்று வித்தியாசமாகவும், மொறுமொறுப்பாகவும் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் மீல் மேக்கரும், கடலைப்பருப்பும் உள்ளதா?
அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அற்புதமான சுவையில் வடை செய்யுங்கள். இந்த மீல் மேக்கர் வடை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு மீல்மேக்கர் வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல்மேக்கர் வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சோயா - 1 கப்
* கடலைப் பருப்பு - 1/2 கப்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பூண்டு - 4 பல்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கடலைப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு
கொதித்ததும், அதில் மீல் மேக்கரைப் போட்டு இறக்கி, 5 நிமிடம் ஊற
வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் 2
முறை அலசிவிட்டு, அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் சோம்பு, வரமிளகாய், பூண்டு பற்களை சேர்த்து
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மீல் மேக்கரை சேர்த்து கொரகொரவென்று அரைத்து, ஒரு
பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் ஊற வைத்த கடலைப்பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு
சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்து, மீல் மேக்கருடன் சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை
மிளகாய், கறிவேப்பிலை, புதினா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின் பிசைந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி தட்டையாக வடை
போன்று தட்டிக் கொள்ள வேண்டும். ஒருவேளை மாவு ஒன்று சேராமல் பிரிந்து
வந்தால், சிறிது அரிசி மாவை சேர்த்து கலந்து கொண்டு, பின் வடையாக
தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு
பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுத்தால், சுவையான
மீல்மேக்கர் வடை தயார்.



Click it and Unblock the Notifications
