Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி ஸ்னாக் செய்யுங்க... சூப்பரான சைடிஷா இருக்கும்...!
Soya Kola Urundai Recipe in Tamil: அசைவ உணவுகளில் பெருன்பாலான மக்கள் விரும்பும் ஒரு ஸ்பெஷல் உணவு கோலா உருண்டை. சமீப காலமாக கோலா உருண்டை மிகவும் பிரபலமடைந்து வருகிறது. கோலா உருண்டை என்றாலே அது சிக்கன் அல்லது மட்டன் போன்றவற்றில்தான் செய்வார்கள். ஆனால் கோலா உருண்டையை அசைவத்தில் மட்டும்தான் செய்ய வேண்டுமென்று அவசியமில்லை. உங்கள் வீட்டில் ஒரு கப் சோயா இருந்தாலே போதும் சுவையான கோலா உருண்டை செய்யலாம்.
இந்த சோயா கோலா உருண்டையை மதிய வேளையில் சைடு டிஷ்ஷாகவும் சாப்பிடலாம் அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். உங்களுக்கு சுவையான சோயா கோலா உருண்டை ரெசிபியை எப்படி வீட்டில் செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே சோயா கோலா உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- சோயா - 1 கப்
- சின்ன வெங்காயம் - 10
- துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
- பட்டை - 1
- கிராம்பு - 3
- ஏலக்காய் - 2
- சோம்பு - 1 டீ ஸ்பூன்
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- இஞ்சி - சிறிய துண்டு
- பூண்டு - 5
- மஞ்சள்தூள் - கால் டீ ஸ்பூன்
- பச்சைமிளகாய் - 3
- வேக வைத்த உருளைகிழங்கு - 1
- பொட்டுகடலை - 2 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
- சோயாவை கொதிக்கும் நீரில் போட்டு ஒரு 5 நிமிடம் ஊற வைத்தால் பஞ்சு போல வெந்துவிடும். பிறகு தண்ணீரை வடித்து விட்டு சோயாவை நீர் இல்லாமல் நன்றாக பிழிந்து வைத்து கொள்ளவும்.
- மிக்ஸியில் பொட்டுகடலையைப் போட்டு மாவாக அரைத்து ஒரு பாத்திரத்தில் தனியாக வைத்துகொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
- பின்னர் சின்னவெங்காயம் பச்சைமிளகாய் ,இஞ்சி ,பூண்டு , தேங்காய், சோம்பு, சீரகம் போட்டு வதக்கி ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
- பின்னர் வடித்து வைத்த சோயா, உருளைகிழங்கை மிக்ஸியில் போட்டு விட்டு விட்டு அரைத்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- இந்த கலவையை கைகளில் நன்றாக பிசைத்து கொள்ளலாம். இந்த கலவையை.பொட்டுக்கடலை மாவு,வதக்கிய வெங்காயம் போட்டு வைத்து இருக்கும் கிண்ணத்தில் போட்டு ,சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து பிரட்டிய கோலா உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- வீட்டில் ப்ரெட் துகள்கள் இருந்தால் அதில் பிரட்டி அதன்பின் பொரித்தெடுத்தால் மொறுமொறுவென்று இருக்கும் .
- சூடாக பின் மல்லி சட்னி, தக்காளி சாஸ் உடன் பரிமாறவும். சூடாக இருக்கும் போது உள்ளே சிறிது தளர்வாக இருக்கும், ஆறிய பின் இறுக்கமாக மாறிவிடும்.
- கோலா கலவையை தயார் செய்து குறைந்தது அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்தால் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications