தென்னிந்திய ஸ்டைலில் சுவையான மேக்ரோனி ரெசிபி செய்வது எப்படி?

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

குழந்தைகளுக்கு மேக்ரோனிஎன்றால் ரெம்பவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிடித்தமான ரெசிபி என்றால் இந்த மேக்ரோனிதான். அதிலும் தென்னிந்திய ஸ்டைலில் செய்யப்படும் மேக்ரோனிஒரு தனிச் சுவை பெற்றது. சமையல் கலை வல்லுநரான செஃப் கவுரவ் சதா செய்யும் தென்னிந்திய ஸ்டைல் மேக்ரோனிதனி புகழ்பெற்றதும் கூட.

இந்த ரெசிபியில் முக்கியமாக பயன்படுத்தும் பொருட்கள் கறிவேப்பிலை மற்றும் சாம்பார் பொடி ஆகும். கறிவேப்பிலையின் நறுமணமும் சாம்பார் பொடியின் காரசாரமும் நம்மல சாப்பிட தூண்டாமல் விடாது. கண்டிப்பாக இந்த தென்னிந்திய ஸ்டைல் ரெசிபியை சாப்பிட்ட பிறகு உங்கள் நாக்கில் நீண்ட நாட்களுக்கு அதன் ருசி நீங்காமல் ஓட்டி கொண்டு இருக்கும்.

South Indian Style Macaroni Recipe
தென்னிந்திய ஸ்டைல் மேக்ரோனிரெசிபி / தென்னிந்திய பாணியில் மேக்ரோனிசெய்வது எப்படி /செளத் இன்டியன் ஸ்டைல் மேக்ரோனிரெசிபி
Prep Time
10 Mins
Cook Time
10M
Total Time
20 Mins

Recipe By: செஃப் கவுராவ் சதா

Recipe Type: ஸ்நாக்ஸ்

Serves: 3 பேர்கள்

Ingredients
 • தண்ணீர்-1 லிட்டர்

  உப்பு - தேவைக்கேற்ப

  மேக்ரோனி- 2 கப்

  வெஜிடபிள் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்

  கடுகு - 1 டேபிள் ஸ்பூன்

  கறிவேப்பிலை - 10-12

  மீடியம் வடிவ வெங்காயம், நறுக்கியது - 1

  சிறிய வடிவில் பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1-2

  பீன்ஸ் (சதுர வடிவில் நறுக்கியது மற்றும் வேக வைத்தது ) - 1/4

  சாம்பார் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்

  வெஜ் மயோனைஸ் - 5 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
 • ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர் நிரப்பவும்

  மிதமான தீயில் அடுப்பில் வைத்து தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்

  அதனுடன் 9 கிராம் உப்பு மற்றும் மேக்ரோனிஇரண்டையும் சேர்க்கவும்

  மேக்ரோனிபாக்கெட்டில் கொடுத்துள்ள நேரம் அல்லது 5 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும்

  மேக்ரோனிபாத்திரத்தின் அடியில் ஒட்டாத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்

  ஒரு அகன்ற கரண்டியை எடுத்து 120 மில்லி லிட்டர் பீக்கரில் (கண்ணாடி குடுவை) பாஸ்தாஸ்டோக்கை எடுத்து கொண்டு சமைக்கவும்.

  ஒரு வடிகட்டியை கொண்டு சமைத்த பாஸ்தாவில் உள்ள தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.

  இப்பொழுது அடி ஒட்டாத ஒரு கடாயை எடுத்து கொள்ளவும்

  அடி ஒட்டாமல் இருக்க ஸ்பிரே அல்லது எண்ணெய் பயன்படுத்தி கொள்ளலாம்

  கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்

  நன்றாக வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பீன்ஸ், காலிபிளவர், சாம்பார் மசாலா, கொஞ்சம் உப்பு சேர்க்க வேண்டும்

  நன்றாக கிளறி ஒரு நிமிடம் வரை காய்கறிகளை வேக வைக்கவும்

  இப்பொழுது இதனுடன் சமைத்த பாஸ்தாஸ்டோக்கை சேர்க்கவும் மற்றும் நன்றாக கிளறவும்

  பிறகு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி அதனுடன் மயோனைஸ் சேர்த்து கிளறவும்

  மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து 1 நிமிடம் வரை குறைந்த தீயில் வைத்து கலவை கெட்டியாகும் வரை சமைக்கவும்

  இதனுடன் சமைத்த மக்ரோனியை சேர்த்து நன்றாக கிளறவும்

  இப்பொழுது மேக்ரோனிகலவையை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும். சுவையான தென்னிந்திய ஸ்டைல் மேக்ரோனிரெசிபி ரெடி

Instructions
 • நீங்கள் விருப்பப்பட்ட காய்கறிகளையும் சேர்த்து பயன்படுத்தி கொள்ளலாம்.
Nutritional Information
 • பரிமாறும் அளவு - 1 கப்
 • கலோரிகள் - 400 கலோரிகள்
 • கொழுப்பு - 32 கிராம்
 • கார்போஹைட்ரேட் - 45 கிராம்
 • நார்ச்சத்து - 3 கிராம்
[ 5 of 5 - 104 Users]
Story first published: Tuesday, December 12, 2017, 16:15 [IST]
Subscribe Newsletter