Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
வெஜிடேபிள் பக்கோடா
மாலையில் டீ/காபி குடிக்கும் போது, சூடாகவும், மொறுமொறுப்பாகவும் செய்து சாப்பிடத் தோன்றும். அப்போது பலரும் பஜ்ஜி, போண்டா, பக்கோடா என்று தான் செய்து சாப்பிடுவோம். அதிலும் பக்கோடா என்றால் வெங்காய பக்கோடாவைத் தான் செய்வோம். ஆனால் வீட்டில் உள்ள ஒருசில காய்கறிகளைக் கொண்டும் அற்புதமான சுவையில் பக்கோடா செய்யலாம் என்பது தெரியுமா?
இங்கு அப்படி காய்கறிகளைக் கொண்டு எப்படி பக்கோடா செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வெஜிடேபிள் பக்கோடாவின் செய்முறையைப் பார்த்து செய்து சுவைத்து பாருங்களேன்...

தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன் (அரைத்தது)
ஓமம் - 1 டீஸ்பூன்
வெந்தயக் கீரை - சிறிது
கேரட் - 1 (நீளமாக மற்றும் மெல்லிசாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (நீளமாக மற்றும் மெல்லிசாக நறுக்கியது)
பச்சை மிளகாய - 1 (நீளமாக மற்றும் மெல்லிசாக நறுக்கியது)
கத்திரிக்காய் - 1 (நீளமாக மற்றும் மெல்லிசாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (நீளமாக மற்றும் மெல்லிசாக நறுக்கியது)
துருவிய பன்னீர் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கடலை மாவு, மிளகாய் தூள், சோம்பு, ஓமம் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் தண்ணீர் ஊற்றி, பக்கோடா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள பக்கோடா கலவையை எண்ணெயில் தூவி பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வெஜிடேபிள் பக்கோடா ரெடி!!!



Click it and Unblock the Notifications
