Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
சிம்பிளான மைசூர் போண்டா
மாலை வேளையில் டீ அல்லது காபி குடிக்கும் போது, நன்கு சூடாக வடை, பஜ்ஜி அல்லது போண்ட செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். அதில் போண்டா என்றால் பலரும் உருளைக்கிழங்கு போண்டாவைத் தான் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் மிகவும் பிரபலமான மைசூர் போண்டாவை செய்து சுவைத்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.
இங்கு அந்த மைசூர் போண்டாவை எப்படி மிகவும் சிம்பிளாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாகவும், ஓரளவு கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, தேங்காய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
பின் நெருப்பை மிதமாக வைத்து, எண்ணெயில் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எடுத்து போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப்போன்று அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சுவையான மைசூர் போண்டா ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
