Latest Updates
-
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க..
ராம்நாடு நன்னாரி பால் சர்பத்
கொளுத்தும் கோடையில் பலரும் நன்கு குளிர்ச்சியாக ஜூஸ் குடிக்க விரும்புவோம். ஆனால் கார்பனேட்டட் பானங்களை குடித்தால், உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகும் என்று பலருக்கும் தெரிந்த ஒன்றாதலால், பலரும் அதனை தவிர்க்க ஆரம்பித்துவிட்டனர். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை அருமையான ஒரு நன்னாரி பால் சர்பத் ரெசிபியைக் கொடுத்துள்ளது.
இந்த நன்னாரி பால் சர்பத் ராம்நாடு பகுதியில் மிகவும் பிரபலமானது. சரி, இப்போது அந்த ராம்நாடு நன்னாரி பால் சர்பத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பால் - 1 கப்
ஊற வைத்த பாதாம் பிசின் - 2 டேபிள் ஸ்பூன்
நன்னாரி சர்பத் - 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - 2
செய்முறை:
முதலில் இரவில் படுக்கும் போது, 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசினை ஒரு பௌலில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். ஒருவேளை அதில் ஏதேனும் ப்ரௌன் நிறத்தில் ஏதேனும் இருந்தால், அதனை நீக்கிவிட்டு போட வேண்டும்.
மறுநாள் ஒரு டம்ளரை எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நன்னாரி சிரப் ஊற்றி, அத்துடன் ஊற வைத்துள்ள பாதாம் பிசின் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து, ஐஸ் கட்டிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் பால் ஊற்றி, ஸ்பூன் கொண்டு நன்கு கலந்துவிட்டால், நன்னாரி பால் சர்பத் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
