Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ஜவ்வரிசி சுண்டல்: நவராத்திரி ஸ்பெஷல்
பல வீடுகளில் நவராத்திரிக்கு கொலு வைக்கும் பழக்கம் இருக்கும். இப்படி கொலு வைப்பவர்கள் 9 நாட்கள் அக்கம் பக்கத்தினரை அழைத்து பூஜை செய்வார்கள். அப்படி பூஜை செய்யும் போது, பிரசாதமாக ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும். அதில் பெரும்பாலானோர் சுண்டல் செய்வார்கள்.
இந்த சுண்டலில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜவ்வரிசி சுண்டல். இது சற்று வித்தியாசமாக இருக்கும். சரி, இப்போது அந்த ஜவ்வரிசி சுண்டலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை இரவில் படுக்கும் போதோ அல்லது 4 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். அதுவும் ஜவ்வரிசி மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
பின்னர் பாசிப்பருப்பை வாணலியில் போட்டு லேசாக பொன்னிறமாக வரும் வரை வறுத்து, பின் அதில் பருப்பு மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பருப்பானது நன்கு வெந்ததும், நீரை வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஜவ்வரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியைப் போட்டு, குறைவான தீயில் உலர்த்த வேண்டும். பின் அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து ஒருமுறை கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
இறுதியில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், ஜவ்வரிசி சுண்டல் ரெடி!!!



Click it and Unblock the Notifications