Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ஆந்திரா ஸ்டைல் கார்ன் வடை
குழந்தைகளுக்கு சோளம் என்றால் பிடிக்கும். அத்தகைய சோளத்தை வெறுமனே வேக வைத்து சாப்பிடக் கொடுக்காமல், வடை போன்று செய்து கொடுக்கலாம். இதனால் அவர்களின் பசி போவதோடு, சந்தோஷமாகவும் இருப்பார்கள். மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
இங்கு ஆந்திரா ஸ்டைல் கார்ன் வடையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
கார்ன்/சோளம் - 1 கப் + 1/4 கப் (வேக வைத்தது)
கடலைப் பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1/2 இன்ச்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் சோளம், கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து 1-2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்ததை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் வேக வைத்த சோளம், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெயானது சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ஆந்திரா ஸ்டைல் கார்ன் வடை ரெடி!!!



Click it and Unblock the Notifications