மசாலா சீயம்

Posted By:
Subscribe to Boldsky

மாலையில் சூடாகவும், காரமாகவும் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், டீ அல்லது காபி குடிக்கும் போது, மசாலா சீயம் செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் ஈஸியாக இருப்பதுடன், மாலை வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்ற அருமையான ஸ்நாக்ஸ்.

மேலும் இந்த மசாலா சீயம் ரெசிபியானது குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தவாறு இருக்கும். சரி, இப்போது அந்த மசாலா சீயம் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Masala Seeyam Recipe

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1/2 கப்

உளுத்தம் பருப்பு - 1/2 கப்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 3/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

முதலில் பச்சரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி, அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, கையால் பிரட்டி விட வேண்டும்.

இறுதியில் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உருட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா சீயம் ரெடி!!!

Image Courtesy: sharmispassions

English summary

Masala Seeyam Recipe

Do you know how to prepare masala seeyam at home easily for this diwali? Take a look...