Latest Updates
-
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்!
காரா சேவ்
பொதுவாக காரா சேவ்வை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த காரா சேவ்வை வீட்டிலேயே செய்து நிறைய சாப்பிடலாம். உங்களுக்கு அந்த காரா சேவ்வை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் இங்கு காரா சேவ்வின் எய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 2 1/2 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
நெய் - 2 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்ஸியில் மிளகை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, நெய், மிளகாய் தூள், மிளகுப் பொடி மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி மென்மையாகவும், முறுக்கு மாவு பதத்திற்கும் பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெயானது சூடானதும், முறுக்கு அச்சை எடுத்து, அதனுள் மாவை வைத்து, எண்ணெயில் பிழிய வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் சுட்டு எடுத்தால், காரா சேவ் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
