Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
பேபி கார்ன் பஜ்ஜி
மார்கெட் சென்றால் பாக்கெட்டுகளில் பேபி கார்ன் விற்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்போது அதனை பார்த்துவிட்டு மட்டும் வராமல், ஒரு பாக்கெட் வாங்கி வாருங்கள். ஏனெனில் பேபி கார்ன் கொண்டு பஜ்ஜி செய்து சாப்பிட்டால், அதிலும் குளிர்காலத்தில் மாலை வேளையில் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
இங்கு அந்த பேபி கார்ன் பஜ்ஜியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து மாலை வேளையில் செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் - 1 பாக்கெட்
மைதா - 3-4 டீஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
கடலை மாவு - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் பேபி கார்ன்னை நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் மைதா, சோள மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், கேசரி பவுடர் மற்றும் உப்பு சேர்த்து, அத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள பேபி கார்ன்னை சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பேபி கார்ன்னை சேர்த்து பொரித்து எடுத்தால், பேபி கார்ன் பஜ்ஜி ரெடி!!!



Click it and Unblock the Notifications
