Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
சிக்கன் வெங்காய பக்கோடா
கோடையில் வெயில் அடிக்கும் என்று பார்த்தால், மழை பெய்து அனைவரது மனதையும் குளிரச் செய்கிறது. இத்தகைய காலநிலையில் மாலை வேளையில் டீ அல்லது காபி குடிக்கும் போது, அத்துடன் நன்கு மொறுமொறுவென்று செய்து சாப்பிட நினைத்தால், சிக்கன் வெங்காய பக்கோடா செய்து சாப்பிடுங்கள்.
இது மிகவும் ஈஸியான ரெசிபி. 10 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம். இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
கடலை மாவு - 1 கப்
கபாப் மசாலா - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 கப்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, உப்பு, கபாப் மசாலா மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் பச்சை மிளகாய், சோம்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்
பின்பு அதில் சிக்கன் துண்டுகள் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் உதித்து விட்டு, தீயில் குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சிக்கன் வெங்காய பக்கோடா ரெடி!!!



Click it and Unblock the Notifications
