பேபி கார்ன் மஞ்சூரியன்

Posted By:
Subscribe to Boldsky

தற்போது மார்கெட்டில் பேபி கார்ன் அதிகம் கிடைக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு பேபி கார்ன் என்றால் கொள்ளை பிரியம். அத்தகயை பேபி கார்னை பலர் வேக வைத்தோ அல்லது பஜ்ஜி செய்தோ தான் குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். ஆனால் பேபி கார்ன்னைக் கொண்டு மஞ்சூரியன் செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், பேபி கார்ன்னை கொண்டு அருமையான சுவையில் மஞ்சூரியன் செய்யலாம்.

இங்கு அந்த பேபி கார்ன் மஞ்சூரியன் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

Baby Corn Manchurian Recipe

தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் - 10 (துண்டுகளாக்கப்பட்டது)

சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

மைதா - 1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

மஞ்சூரியனுக்கு...

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

குடைமிளகாய் - 1 (சிறியது மற்றும் பொடியாக நறுக்கியது)

பூண்டு - 2 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்

தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் சாஸ்/பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பேபி கார்னை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, பேபி கார்ன் மென்மையாக வெந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் மைதா, சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், உப்பு மற்றும் வேக வைத்துள்ள பேபி கார்ன் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி 15 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள பேபி கார்னை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.

அடுத்து அதில் சோயா சாஸ் சேர்த்து, தீயை ஃபுல்லில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு தீயை குறைத்து, பச்சை மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சிறிது தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் வறுத்து வைத்துள்ள பேபி கார்னை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், பேபி கார்ன் மஞ்சூரியன் ரெடி!!!

Image Courtesy: sharmispassions

English summary

Baby Corn Manchurian Recipe

Do you know how to make baby corn manchurian at home? Here is the recipe. Take a look...
Story first published: Thursday, November 6, 2014, 17:31 [IST]
Subscribe Newsletter