Latest Updates
-
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம்
சுரைக்காயை இப்படி அவியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
Sorakkai Aviyal Recipe In Tamil: மதிய வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சைடு டிஷ் இல்லாமல் சாப்பிடமாட்டார்களா? எப்போதும் ஒரே மாதிரி காய்கறிகளைக் கொண்டு பொரியல் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் அவியல் செய்யுங்கள்.
பொதுவாக அவியலை நிறைய காய்கறிகளை பயன்படுத்தி செய்வார்கள். ஆனால் ஒரே ஒரு காயைக் கொண்டும் அவியல் செய்யலாம். அதுவும் சுரைக்காய் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் அவியல் செய்யலாம். இப்படி சுரைக்காயை அவியல் செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு சுரைக்காய் அவியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் அவியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 5-6
* சீரகம் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சுரைக்காய் - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* பச்சை மிளகாய் - 1
* கெட்டித் தயிர் - 1 கப்
அரைப்பதற்கு...
* இஞ்சி - 1 இன்ச்
* பச்சை மிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தேங்காய் - 1/4 மூடி
* கொத்தமல்லி - சிறிது
* சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, வெங்காயம்
கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் காய் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி, பச்சை மிளகாயை
முழுமையாக சேர்த்து மூடி வைத்து, சுரைக்காய் மென்மையாகும் வரை வேக
வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம்,
கறிவேப்பிலை, தேங்காய், கொத்தமல்லி மற்றும் சீரகத்தை சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* சுரைக்காய் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய்
விழுதை சேர்த்து கிளறி, மூடி வைத்து 2-3 நிமிடம் மீண்டும் நன்கு
கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அவியல் நன்கு குளிர்ந்த பின், 1 கப் கெட்டி தயிரை சேர்த்து கிளறி
விட வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும்
கொத்தமல்லியை சேர்த்து தாளித்து ஊற்றினால், சுவையான சுரைக்காய் அவியல்
தயார்.



Click it and Unblock the Notifications
