Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
சுரைக்காய் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Surakkai Adai Recipe In Tamil: காலையில் எப்போதும் ஒரே மாதிரியான டிபனை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் காலை டிபனை சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? பொதுவாக சுரைக்காயைக் கொண்டு சாம்பார், கூட்டு என்று தான் செய்வோம்.
ஆனால் அதைக் கொண்டு அருமையான சுவையில் அடை சுடலாம் என்பது தெரியுமா? இப்படி சுடும் அடையானது மிகவும் சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. இந்த அடையை வெறுமனே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

உங்களுக்கு சுரைக்காய் அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* சுரைக்காய் - 1
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
பிற பொருட்கள்...
* ரவை - 3/4 கப்
* அரிசி மாவு- 1/4 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் சுரைக்காய், சீரகம், மிளகு, உப்பு மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 3/4 கப் ரவை,
1/4 கப் அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் பொடியாக நறுக்கிய
வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், கேரட் சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, கைகளால் பிசைந்து விட வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி, அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி,
கலந்து வைத்துள்ள அடை மாவு ஒரு கரண்டி ஊற்றி அடை போன்று பரப்பி, மூடி
வைத்து மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்
அடையை திருப்பிப் போட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான
சுரைக்காய் அடை தயார்.



Click it and Unblock the Notifications