Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
கல்யாண வீட்டு அவியல் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
Kalyana Veetu Aviyal Recipe: உங்கள் வீட்டில் உள்ளவர்கள் காய்கறிகள் சாப்பிடமாட்டார்களா? எப்படி சமைத்து கொடுத்தாலும் சாப்பிட மறுப்பார்களா? உங்கள் குழந்தைகள் கூட காய்கறிகள் என்றால் ஓடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு காய்கறிகளை வழக்கமாக செய்யும் பொரியல், வறுவல் என்று செய்து கொடுக்காமல், அவியல் செய்து கொடுங்கள்.
இப்படி அவியல் செய்யும் போது, குழந்தைகள் காய்கறிகளை விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக அடிக்கடி இந்த அவியலை செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். இந்த அவியல் கேரளாவில் மிகவும் பிரபலமானது. மேலும் இதை கல்யாண வீடுகளிலும் செய்வார்கள். இந்த அவியல் செய்ய நீண்ட நேரம் எதுவும் எடுக்காது. டக்கென்று 10 நிமிடத்தில் செய்துவிடலாம்.

உங்களுக்கு கல்யாண வீட்டு அவியலை எப்படி செய்வதென்று தெரந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு அவியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கேரட் - 1 கப் (சற்று நீள துண்டுகளாக்கப்பட்டது)
* பீன்ஸ் - 1 கப் (சற்று நீள துண்டுகளாக்கப்பட்டது)
* முருங்கைக்காய் - 1 கப் (சற்று நீள துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் பூசணி - 1 கப் (சற்று நீள துண்டுகளாக்கப்பட்டது)
* வெள்ளை பூசணி - 1 கப் (சற்று நீள துண்டுகளாக்கப்பட்டது)
* வாழைக்காய் - 1 கப் (சற்று நீள துண்டுகளாக்கப்பட்டது)
* முந்திரி - 5
* தேங்காய் - 1 கப் (துருவியது)
* கடலை எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* தயிர் - 100 மிலி
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் குக்கரை எடுத்து, அதில் சிறிது நீரை ஊற்றி,
முருங்கைக்காய், வாழைக்காய், சேனைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், வெள்ளை
பூசணிக்காய், மஞ்சள் பூசணிக்காய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் 1 கப் துருவிய தேங்காய், 3/4 டீஸ்பூன் சீரகம்,
2 பச்சை மிளகாய், 5 முந்திரி சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டீஸ்பூன் கடலை
எண்ணெய் ஊற்றி, அதில் 1/4 டீஸ்பூன் சீரகம் மற்றும் 1 கொத்து
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்துள்ள காய்கறிகளை, நீருடன் அப்படியே சேர்த்து
கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கிளறி விட்டு இறக்கி, 5 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தயிரை நன்கு அடித்து சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலைத் தூவி
கிளறினால், சுவையான கல்யாண வீட்டு அவியல் தயார்.



Click it and Unblock the Notifications
