Latest Updates
-
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
சோம்பு கீரையை இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Sombu Keerai Kadayal: இதுவரை எத்தனையோ கீரையை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். சோம்பு கீரையை சாப்பிட்டிருக்கிறீர்களா? என்னது சோம்பு கீரையா, நான் பார்த்ததில்லையே என்று சொல்லலாம். அதன் பெயர் வேண்டுமானால் தெரிந்திருக்காது. ஆனால் இந்த கீரையை நீங்கள் மார்கெட்டுகளில் பார்த்திருப்பீர்கள். இதை ஆங்கிலத்தில் 'Dill' என்று அழைப்பார்கள்.
இந்த கீரை நிறைய சத்துக்களைக் கொண்டது. குறிப்பாக செரிமானத்திற்கு நல்லது மற்றும் உடல் சூட்டைக் குறைக்கும். இந்த சோம்பு கீரையை பருப்பு சேர்த்து கடைந்து சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால், சுவை அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு சோம்பு கீரை கடையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோம்பு கீரை கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 கப்
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு கீரை - 1 கட்டு
* தக்காளி - 1 (நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் ஊற வைத்த பருப்பை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு,
அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் 1 1/2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி
அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு சோம்பு கீரையை நீரில் கழுவி, அதை பொடியாக நறுக்கி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெயை
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்
ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து
கிளறி, சோம்பு கீரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு
கிளறி, வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, அத்துடன் 1 கப் நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 5-8 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சோம்பு
கீரை கடையல் தயார்.



Click it and Unblock the Notifications